40 சங்கீதம்
40 சங்கீதம்
குறள் – ராகத் தலைவனுக்கு ராசனாந் தாவீது
பாகமா யொப்புவித்த பாட்டு
குறிஞ்சி ஆதிதாளம்
ஏகோவாவை நோக்கியேகாத் திருந்தேன் அவர்
என்னண்டை சாய்ந்தெனது
விண்ணப்பங்கேட்டார்.
1 மிகுபயங்கரக்குழியும் உழையும் சேரும்
விட்டென்னைக் கைதூக்கி
வெளியேற்றி வைத்தார் – ஏகோ
2 என்காலைக் கன்மலையின்மேலே நிறுத்தி
என்னுடைய அடிகளையும் உறுதியாய்வைத்து
என்வாயில்த் தெய்வத்தைத் துதிக்கும் மகா
இன்பமாம்பாட்டுகளை இசைவாகவைத்தார் – ஏகோ
3 வெகுவானமனிதரைக்கண்டு நல்ல
எகொவாவில் நம்பிக்கை யாயிருப்பார்கள்
அகந்தைபொய் யுள்ளோரைநோக்கா திருந்து
எகொவாவைநம்புகிற மனிதனே பாக்யவான் – ஏகோ
4 உம்முடைய அதிசெயம் யோசிப் பெல்லாம்
எம்முடைய மேல்ப்பெருகச் செய்துவைத்தீரே
எம்முடையதெய்வமாம் எகொவா உமக்கு
இணையாகஒப்பிடுத லில்லையேயென்று – ஏகோ
5 கலைக்கியான மாயறிவித்தாலும் அதுகள்
கணக்குக்கு மேற்பட்ட கணிசமாயிருக்கும்
பலி*மின்கா விரும்பாமல்ச்செவியை எனக்குப்
பணிவாக ஆயத்தஞ் செய்தீரேயென்று – ஏகோ
6 புறள்சருவ தகனத்தின்பெலியும் பாவம்
போக்குகிற பெலியும்நீர் கேட்டதேயில்லை
வருகிறே னென்றப்போ சொன்னேன் புஸ்தக
சுருளிலே யெனைப்பற்றி யெழுத்துண்டேயென்று – ஏகோ
7 என்சுவாமி உமக்கிங்கே மிகவும் ஏற்றே
இருப்பதைஇதமிய மாகநான் செய்வேன்
நிண்ணயமா என்நெஞ்சுக்குள்ளே உமது
நியாயப்பரமாணமே யிருக்கிறதென்று – ஏகோ
8 திரளானசபையிலேநீதி தன்னைப்
பிரசங்கஞ்செய்குவேன் என்சுவாமி பின்னும்
திரும்பியென் னுதடுகள்மூடேன் என்று
தெளிவாக நீரறிந் திருக்கிறீரென்று – ஏகோ
9 உம்முடைய நீதியையெனது இதையம்
உள்ளத்துக் குள்ளேநான் மறைத்திடமாட்டேன்
உம்முடையசத்தியம் இரட்சிப் பிதுகள்
ஒவ்வொன்றாய்விவரித்துச் சொல்லுவேனென்று – ஏகோ
10 உம்முடையகிருபையானதையும் மற்றும்
உம்முடையஉண்மையா னதையும் நானிங்கே
கும்மலாஞ்சபைக்குள்ளே தெரியப் படுத்தக்
கூசாமலொழியாம லிருப்பேனேயென்று – ஏகோ
11 எகொவாவே உம்முடையஇரக்கம் எனக்கு
அகப்படா தகன்றிட இடம்பண்ணவேண்டாம்
வெகுவானஉமதுண்மை கிருபை எந்த
வேளையும்எனைக்காக்க இடம்பண்ணுமென்று – ஏகோ
12 எண்ணிக்கைக் குள்ளடங்காத பொல்லாங்
கிங்கென்னைச் சூழ்ந்து கொண்டிருக்கிறதுமல்லாமல்
என்பார்வைக் கடங்கா அக்கிரமம்இங்கே
என்னையேபின்தொடர்ந்து பிடித்ததேயென்று – ஏகோ
13 அதுகளென் தலைமயிர்களிலும் மகா
அதிகமாயிருக்கிற முகாந்திரத்தாலே
அதிர்த்தியாய் என்னிதையம் என்னை விட்டு
அப்பாவே பெயர்ந்துதான் போயிற்றேயென்று – ஏகோ
14 எகோவாவேஎன்னைநீர் விடுவித் தெனக்குச்
சகாயம்பண்ணவே தீவிரித்துக்கொள்ளும்
எகொவாவேஎன்னைநீர் விடுவித் தெனக்குச்
சகாயம்பண்ணவே தீவிரியுமென்று – ஏகோ
15 என்பிராணன் போக்கிடத்தேடும் மனிதர்
ஏகமாய்வெட்கியே நாணிடச்செய்யும்
என்தீங்கைவிரும்புகிற மனிதர் பின்னிட்
டிலட்சையை யடைந்திடக் கடவர்களென்று – ஏகோ
16 என்மேலேஆகாகா என்கும் மனிதர்
இகழ்ச்சியின் பலன்தாங்களடைவதினாலே
மென்மேலும்பயங்கரந் திகிலால் மிகவும்
வேதனையையடைந்திடக் கடவர்களென்று – ஏகோ
17 மகிமையே எகொவாவுக்கென்று உமது
வல்மீட்பைநேசிப்போர் சொல்லட்டும் என்றும்
மகிழ்ந்துமிகச் சந்தோஷப்படட்டும் உமக்குள்
வாஞ்சித்துஉமைத்தேடும் எல்லாரும்என்று – ஏகோ
18 சின்னமுமெளிமையுமானோன் நானே
என்மேலே சுவாமிநினைப் பிருக்குமே என்றும்
என்னைவிடுவிப்பவருந் துணையும் நீர்தாம்
என்பரனே தாமதிக்கவேண்டாமேயென்றும் – ஏகோ