4 சங்கீதம்
4 சங்கீதம்
குறள் – கின்னாரராகத் தலைவனிடம் ஒப்புவித்த
மன் னனாந் தாவீதின் பாட்டு
வெண்பா . வச. 1
நெருக்கத்துக்கென்னை நீக்கிவிசாலத்தில்
இருக்கவைத்த என்நீதிச்சாமி ! – உருக்கமாய்
வந்தென துவிண்ணப்பம் மன்றாட்டுங்கேட்டருளிச்
சந்தோடமாக்கிவையுமே.
1 வது பங்கு. வச. 2 – 5
முகாரி திரிபுடைதாளம்
1 மானிடர்புத்திரரே எம்மட்டுமென்
மகிமையைக் கொலைத்துவிட அபத்தத்தை
மானமாய் விரும்பிக்கொண்டு பொய்யின்
வழியைத் தேடுவீர்கள்
2 சாமிதம் சன்மார்க்கன் தன்னைத்
தயவாய்க்கண்பார்த்தே இந்தப்
பூமியில திசயமாய் நடத்துவார்
புத்தியாய்க் கவனியுங்கள்
3 சாமியின் முகத்தைநான் நோக்கித்
ததிச்சத்தமிடும்போது தமது
நாமத்தின் மகிமையினால் என்னை
நன்றாகக் கேட்டிடுவார்
4 கோவமேவந்தாக்கால் நீங்கள்
பாவத்தைச் செய்ய வேண்டாம் உங்கள்
ஆவியில்ப் பேசியுங்கள் படுக்கையில்
அமைந்தமர்ந்திடுங்கள்
5 நீதியின் நற்பெலியைச் சுவாமிக்கு
நேர்மையாய்ச் செலுத்தி நின்று அவரையே
காதலாய் நம்பியவர் சமுகத்தை
காத்துக்கொண்டிருங்கள்
2 வது பங்கு. வச. 6 – 8
எதுகுலகாம்போதி ரூபகதாளம்
1 நன்மைதனை நமக்குக்காட்டும்
நண்பர்களாரென்று சொல்வோர் மிகுதி
உம்முடைய சமுகவெளிச்சம்
எம்முடைமேல் ஏறெடும்மெய்ப் பரனே
2 மானிடர்க்குத் தானியமும்
மனமகிழ்ச்சித்தி ராட்சர சந் தானும்
காணியான பூ மியாலே
கணிசமாகும்போதுமகிழ்வார்கள்
3 அவ்விதமாஞ்சந்தோஷத்துக்
கதிகமான சந்தோஷத்தை யெனக்கு
செவ்வையாக எந்தன்மனசில்த்
தெய்வமே நீர் கொடுத்து நன்மைசெய்தீர்
4 மனக்கலக்கமற்றேயெந்தன்
மனையிலே நான் தங்கிச் சுகித்திருப்பேன்
தினக்கவலைநீங்கிமகா
சேமமாக நித்திரையுஞ் செய்வேன்
5 தெய்வமான ஏகோவாவாந்
தேவரீ ரால்மாத்ரம் இங்கே நானோ
எவ்விதத்துப்பயமுன்றி
என்றென்றைக்கும் தங்கிச்சுகித் திருப்பேன்