37 சங்கீதம்
37 சங்கீதம்
தாவீதின் சங்கீதம்
உலா
1 பொல்லார்மேல் வீணெரிச்சல்
கொள்ளாதே ஞாயக்கே
டுள்ளோர்மேல்ப் பொறாமை
யாகாதே புல்லைப்போல்
2 சீக்கிரத்தில் மூடறுந்து
தீய்ஞ்சுபோம் பச்சைமுளைப்
போக்குப்போ லோய்ந்தொழிந்து
போவார்கள் ஆக்க
3 எகொவாவை நம்பிநன்மை
யேற்றி உலகில்
அகம்வாழ்ந்து சத்தியத்தை
மேய்ந்து எகொவாவை
4 நன்மனசுப் பூரிப்பாய்
நாடினால் என்றும் அவர்
உன்மன ஆசை
உனக்கருள்வார் உன்வழியை
5 கற்தர்க்குச் சாட்டிவிடு
கற்தரையே நம்பியிரு
கற்தருன் காரியத்தைக்
காத்திடுவார் நித்தமும்உன்
6 நீதி ஒளிபோலும்
ஞாயம் பகல்போலுஞ்
சோதிபோல்த் தோன்றிடப்
பண்ணிடுவார் ஆதலினால்
7 கற்தரையே நோக்கிக்
கருத்தில் அமர்ந்திருந்து
மெத்தவவர் கைபார்த்துக்
கொண்டிருநீ எத்தி
8 வழிவாய்த்துத் தீவினையை
மனஇடும்பாய்ச் செய்யும்
அழிமாந்தன் மேலெரிச்ச
லாகி உழுமாதே,
9 கோவம் நெகிழ்ந்து
கொடுஞ்சினத்தை விட்டுவிடு
பாவவழி யாம்எரிச்சல்
பற்றாதே பாவிகள்
10 வேரறுத்து போவார்கள்
மெய்ப்பரனை நம்புகிற
பேர்பூமி யாட்சி பெறுவார்கள்
பார்இன்னம்,
11 சொல்ப்பத் தருணத்தில்த்
தொலைவானே துன்மார்க்கன்
மெய்ப்படுத்திக் கேள் அவனோ
மீர்ந்திரான் இப்புவியை,
12 மெத்தன வுள்ளவர்கள் மெய்யாய்ச் சுதந்தரிப்பர்
மெத்தச் சமாதான மாய்மகிழ்வர் உத்தமர்க்கு,
13 ஆகாதோன் தீங்கை அகத்தில் நினைந்தவன்மேல்
வேகமாய்ப் பல்க்கடிப்பான்
மெய்ப்பரனோ ஆகாதோன்,
14 நாள்வருகு தென்று நடப்பை யறிவதினால்
நீள அவனை நெகிழ்ந்திடுவார் மீள,
15 சிறுமை எளிமையோர் செம்மை வழியோர்
அறுந்து விழச்செய்ய ஆகாத் தறுகுறும்போர்,
16 தங்களுடைய பட்டயத்தைச் சாட உருவிவிட்டுத்
தங்கள்வில் நாணேற்றித் தாங்குவார்கள் அங்கவர்கள்,
17 கத்தி அவர்கணெஞ்சிற் காரமாய்ப் பாய்ந்தவர்கட்
குற்றவில்த்தானு முறியுமே மெத்தமெத்த
18 ஆகாத பேர்க்குவரும் ஆதாயம் நீதிமான்
பாகமாஞ் சொல்ப்பப் பலனுக்கும் எகாதே,
19 ஆகாதோர் கைமுறியும் ஆனாலோ நீதியரை
ஏகோவா தாங்கி இரட்சிப்பார் வாகாம்,
20 மனவுண்மை யானவர்கள் வாழ்நாளைக்கற்தர்
நினைவா யறிவாரே நீள அனுதினமும்,
21 அவர்கள் சுதந்தரமோ அமையுமே துன்னாள்
அவர்களுக்கு வெட்கம் அணுகாதே அவர்கள்,
22 பஞ்சத்தில் வாட்டும் பசியற்று உண்பார்கள்
வஞ்சக ஆகாதோர் மாய்வார்கள் நெஞ்சஞ்சா,
23 கற்தருடைசத்துருக்கள் காய்ந்துபூல் மேனிபுகை
யுற்றழிந்தாப் போலெரிந்துஒய்வார்கள்மெத்த,
24 கடன்வாங்கி யாகாதோன் காண்பான் செலுத்தான்
கடனிரங்கி ஈவானே நீதி உடையவன்,
25 ஆசீர்வாதத்தை அவராலடைந்தவர்கள்
காசினியைச் சொந்தமாய்க் கையாள்வர் கூசி,
26 அவராலே சாபம் அடைந்தவர்கள் வேரற்
றவமாகி யோய்ந்தே அழிவர் தவமுள்ள,
27 நல்ல மனுசன் நடையோ எகோவாவால்
வல்ல உறுதியடைந்திடுமே மெல்ல
28 அவன்வழிமேல் வாஞ்சை அவர்கொண்டிடுவார்
அவன்விழுந்தும் பார்அவனைத் தள்ளார் அவன்கையை
29 நாதரே தாங்குவார் நானிளைஞ னாயிருந்தேன்
மூதிர் நரைவயதாய் முற்றினேன் நீதியனை,
30 கைவிடுதல் நேர்ந்தவனின் கற்பவித்து அப்பமற்றுத்
தொய்வடைந்த தென்கண்ணில்த்
தோன்றவில்லை மெய்இரங்கி,
31 நித்தங் கடன்கொடுப்பான் நீடாசீர்வாதமவன்
வித் துக்கேயென்றும் விளைந்திடுமே நித்தமும்நீ,
32 பொல்லாப்பை விட்டுவிட்டுப்
புண்ணியத்தைச் செய்துகொண்டு
நில்லு நிலையாக ஏனென்றால் நல்லகற்தர்.
33 தம்முடைய சன்மார்க்கர் தம்மெயென்றுந் தற்காப்பார்
சும்மாஅவர்களைச் சோரவிடார் றெம்மியதாய்,
34 ஞாயத்தை நேசிப்பார் நட்பற்றோர் வித்தார்கள்
வேரற்றுப் போக விழக்கிடுவார் பாரித்து,
35 நீதியர்கள் பூமியை நேராகச் சுதந்தரித்து
ஆதியந்த மாய்வாசஞ் செய்வார்கள் நீதிமான்
36 வாய்ஞானம் பேசுமே ஞாயமவன் நாவுரைக்கும்
நேயபரன் வேதமதன் நெஞ்சினில்த் தோயும்
37 அவன்நடைகள் ளாடாது ஆகாத மாந்தன்
அவனை மிகவேவு பகர்த்து அவனைக்
38 கொல்ல வகைபார்த்தும் கொடுக்கார் இவன்கையில்
நல்ல பரனவனை ஞாயச்சொல்ச்சொல்லுகையில்
39 ஆகாதோன் என்று அவன்தீர்ப் படையவைக்கார்
ஏகோவாவே நாட்டத்தைக் காத்திருந்து ஏகன்
40 வழியைநீ கைக்கொண்டு வந்தால் உலகை
அழியாச் சுதந்தரமாய் ஆள வழியாக
41 உன்னை உயர்த்துவார் ஒவ்வாத துன்மார்க்கர்
பின்கிளைகள் வேரறநீ பார்ப்பாயே மின்னி,
42 முளைத்த நிலத்தினிற்கும் மூட்டு மரம்போல
தழைத்தவர்பந்தனாம் ஆகா அழிம்பனைக்
43. கண்டேன் இவனொழிந்தான் காதலாய்த் தேடினேன்
எண்டிசையும் பார்த்தேன் இவனில்லை கண்டுகொள்
44 செம்மையுள்ளோன்உத்தமனைச்செவ்வையாய் மாதிரிபார்
அம்மனிதன் பின்னே சமாதானங்கும்மும்,
45 துரோகிகளோ ஒக்கத் தொலைவார்கள் ஆகாக்
கிராமத்தார் பின்வே ரறுமே இரட்சிப்பு,
46 நீதியர்பங் காகும் நெருக்கத்தின் காலத்தில்
போதும் பெலன்பரனால் இங்கவர்கள் வீதமாம்,
47 கற்தர் அவர்களைத்தற் காத்து விடுவிப்பார்
ஒத்தாசை பண்ணுவார் ஒவ்வாத எத்தர்கள்,
48 கைக்கு அவர்கள் சுடர விடுவிப்பார்
தெய்வம் அவர்கணம்பிக்கை.