36 சங்கீதம்
36 சங்கீதம்
குறள் – ராகத்தலைவனுக்கு யாதாசன் தாவீது
பாகமா யொப்புவித்த பாட்டு
1 வது பங்கு. வச.1 – 4
வராளி ஆதிதாளம்
ஆதாதவன் துரோகப்பேச்சென்
அந்தரங்க நெஞ்சத்துக்கு
அதிகத்தெளி வாய்த் தெரியும்
1 ஏகோவாவுக் கஞ்சு மச்சம்
இவன்கண்கட்கு முன்னேயில்லை – ஆகா
2 தன்துற்குணம் நிறைவேற்ற
தனக்குள்வற்மச் சிந்தைவைக்க
தன்பார்வைக்கே யேற்றபடி
தனக்கிச்சகம் பேசிக்கொள்வான் – ஆகா
3 அவன்வாய்பிறக்கஞ் சொல்லோ கபடம்
அக்கிரம மாக இருக்கும்
அவனோநன்மை செய்யும் யுக்தி
அனுசரிக்கா தகற்றிவிட்டான் – ஆகா
4 அவனோதனது படுக்கைமேலே
அக்கிரமச் சிந்தைகொண்டான்
அவன்நலமல்லா வழியிளிற்பான்
அருவருக்கான் தன்பொல்லாங்கை – ஆகா
2 வது பங்கு. வச.5 – 12
உசானி சாபுதாளம்
உமதுகிருபை உன்னதங்களில்
உள்ளதாம் எகொவாவே
உமதுசத்தியம் வானவிரிவு
உயரமட்டுக்கும் எட்டும்
1 உமதுநீதி பெலத்தமலையாம்
உமதுஞாயம் மா ஆழம்
சமஸ்தமனிதர் மிருகத்திரளுந்
தற்காப்பீர் எங்கள் சுவாமீ – உமது
2 உமதுகிருபை எத்தனை அருமை
உவந்து மானிடபுத்திரர்
உமதுசெட்டைகள் நிழலிலதினால்
உரமாய்த் தங்குகிறார்கள் – உமது
3 உமதுவீட்டின் சம்பூரணத்தால்
உண்டுமஸ்தாகிறார்கள்
உமதுசெல்வ நதியாலவர்க
ளுடையதாகந் தீருதே – உமது
4 உம்மிடத்திலே சீவஊற்று
உண்டாயிருக்கு தெய்வமே
உம்முடைநல்ல வெளிச்சப்பவுசில்
ஒளியைக்காண்கிறோம் தெய்வமே – உமது
5 உம்மையறிந்த மனிதர்மேலே
உமதுகிருபையை நீட்டும்
செம்மையிதைய மாந்தர்கள் மேலே
உம்முடைநீதியை நீட்டும் – உமது
6 ஒகோ! அக்கிரமக் காரர்காலென்னை
உதைக்கவராமல்க் காரும்
ஆகாதமாந்தர்கள் கையென்னைப் பறக்க
அடிக்கா தகற்றியருளும் – உமது
7 அங்கே அக்ரமக் காரர் விழுந்து
அமிழ்ந் திப்போய்க் கிடப்பார்கள்
இங்கேதிரும்ப எழுந்திருக்காமலே
என்றுந் தள்ளுண்டு போவார்கள் – உமது