33 சங்கீதம்
33 சங்கீதம்
1 வது பங்கு. வச.1 – 8
உசானி ரூபகதாளம்
நீதிமான்காள் கற்தருக்குள்க்
கெம்பீரமாய் மகிழ்ந்திடுங்கள்
ஒதுந்துதிசெம்மை மாந்தர்க்கென்றும்
இசைந்திருக்கும்
1 பத்துத்தந்திவீணை தம்பூர்
சுரமண்டலத்தொனியினாலும்
கற்தருக்குக் கீர்த்தனங்கள் பாடி
துதிசெய்யுங்கள் – நீதி
2 நேர்த்தியாகக் கெம்பீரமாய்
வாத்தியங்கள் கொட்டிக்கொண்டு
தோத்திரத்தின் புதுப்பாட்டாக அவரைப்
பாடிடுங்கள் – நீதி
3 கர்த்தருடை வார்த்தை செம்மை
கர்த்தற்செய்கை சத்தியந்தான்
உத்தமத்தைநீதியையும் அவரே
நேசிக்கிறார் – நீதி
4 பூமிகர்த்தர் கிருபையினால்ப்
பூரணமாய் நிறைந்திருக்கும்
சாமிசொல்லால்ப் பரமண்டலங்கள்முதலாய்
உருவாயிற்றே – நீதி
5 கர்த்தர்வாயினாவியினால்
பரமண்டல இடங்களிலே
மொத்தச்சேனைதானுஞ் செம்மை யாக
உண்டாயிற்றே – நீதி
6 பாதாளத்தைப் பொக்கிசம்போல்
பத்திரமாயிருத்திவைத்து
பூதலத்தின்கடல்த் தண்ணீர்கள் மொத்தம்
கூடச்செய்தார் – நீதி
7 கர்த்தருக்குப் பூமியெல்லாந்
தத்தளித்துநின்றிடட்டும்
இத்தலத்துக்குடிகள் யாரும் அவருக்
கஞ்சிடட்டும் – நீதி
2 வது பங்கு. வச.9 – 22
எதுகுலகாம்போதி ஆதிதாளம்
எகொவாசொல்ல எதுவுமாகும்
1 எகோவாகட்டளை யிடஎதும்நிற்கும் – எகொ
2 சாதிகள்யோசனை தவிர்த்துவீண்சனங்களின்
சூதானநினைவுகள் தொலைந்திடச்செய்யும் – எகொ
3 தம்மனநினைவுகள் தலைமுறைத்தொடர்க்கும்
தம்மாலோசனை சதாகாலஞ்செலச்செய்யும் – எகொ
4 தாந்தெய்வம் என்றதைத் தெரிந்திட்டசாதியும்
மாந்தர்க்குள்ளவர் தமக்குநற்சுதந்தரப்
பாந்தமாகத் தெரிந்திட்ட சனங்களும்
பேர்ந்திடாப்பெரும் பாக்கியமுள்ளதே – எகொ
5 பரமண்டலங்களி லிருந்துபார்த்தெல்லா
நரமக்களையுமே நன்றாகநோக்கிற – எகொ
6 தாமிருக்கிறஇடந் தனிலிருந்தெல்லாப்
பூமியின்குடியையும் போற்றிக்கண்ணோக்கிற – எகொ
7 இவர்களெல்லாருடை இதயமும் உருப்பித்து
இவர்களின்செய்கைகள் யாவையுங்கவனிக்கும் – எகொ
8 ஏர்திரட்படையால் இராசன்மீட்படையான்
வீரன்தன்பெலத்தின் மிகுதியால்த்தப்பான் – எகொ
9 பரிரட்சிப்படைய விருதாஅதுதன்
பெரியதாம்பெலத்தால் பெருமோச விலக்கா தெகொ
10 அஞ்சித்தம்தயை காத்திருப்போர்களின்
நெஞ்சமாத்துமம் மரணத்துக்ககலவும்
பஞ்சத்தவர்களை உயிருடன்காக்கவும்
மிஞ்சக்கண்களை அவர்கள்மேல் வைத்திடும் – எகொ
11 நம்முடைஆத்துமம் நவ்வியகாதலும்
நம்முடைஉதவி பரிசையுமாகிய – எகொ
12 நாமவர்பரிசுத்த நாமத்தைநம்பினோம்
ஆம்நமதிருதயம் அவருக்குள்மகிழுமே – எகொ
13 உம்மைஎகொவா நம்பினோமே
உம்முடைகிருபை அம்மட்டிலெங்கள்மேல்
என்றென்றைக்குமே நின்றிடக்கடவது – எகொ