32 சங்கீதம்
32 சங்கீதம்
தாவீதின் போதக சங்கீதம்
வெண்பா
எவனுடையபாவத்தை ஏகோவாமூடி
எவனுடைய மீறுதலை ஏகோவா நீக்கி
எவன்மேலே அக்கிரமம் ஏற்றாதிருக்கும்
அவன்தானே பாக்கியவான் ஆம்
பியாகடை ஆதிதாளம்
ஆவியில்க்கபடம் அற்றவன் பாக்கியவான் அவன்
ஆனந்தப் பாக்கியமுடையவனே
1 பாவந்தன்னை மனதில்ப்
பதுக்கினேன் அடக்கினேன் ஆனால்
பரும்பெரும்மூச்சினால்க் கதறிநின்றேன் அதின்
பலனென்னைச் சதைவற்றி எலும்புலர்ந்தேன் – ஆவி
2 எகோவாகைஎன்மேல் இரவிலும்பகலிலும் மிக
இருத்தியேபெருஞ்சுமையாயிருந்ததினால்வேனல்
இருக்கம்போல்என்சாரம் வறண்டதுவே – ஆவி
3 அடியேனின்பாவத்தை
அக்ரமத்தையறிவித்தேன் நான்
அதைஉமக்கறிக்கை செய்வனென்றேன் உம்மால்
அச்சணமேமன்னிப்பைஅடைந்துகொண்டேன் – ஆவி
4 சகாயங்கிடைக்குந்
தருணத்திலிதற்காய் இங்கே
சன்மார்ககன்எவனுஞ் செய்வான் மன்றாட்டை வெகு
தண்ணீர்வெள்ளங்கள்வந்தும் அவன்மாயான் – ஆவி
5 விக்கனத்துக்கென்னை
விலக்கியேகாத்தீர் எனக்கு
மேன்மையாம்மறைவிடமா யிருந்து கொண்டீர்என்னை
விடுவித்தல்க்கெம்பீரமாய்ச்சூழ்ந்துகொண்டீர் – ஆவி
6 புத்திதன்னைப் படிப்பித்துப்
போம்வழியைப் போதிப்பேன் உன்மேல்
புண்ணியக்கண்களை வைத்துனக்கு வேண்டும்
போர்ந்தநல்யோசனை தருவமென்றீர் – ஆவி
7 வசப்படவாரால்க் கடிவாளக்கட்டினால் மனிதர்
வாய்கட்டுங்குதிரைபோல் வேசரிபோல் உணர்வு
மாய்ந்துசஞ்சாரஞ்செய்யாதேயென்றீர் – ஆவி
8 ஆகாதவனுக்குவேதனைகளனேகம் ஆனால்
ஆண்டவரானஉம்மைநம்பினோனைக்கிருபை
அதிகம்அதிகமாய்ச் சூழ்ந்துகொள்ளும் – ஆவி
9 நீதிமான்காள்செம்மை யிருதயத்தாரே நன்றாய்
நீங்களிங்கனைவருங் கற்தருக்குள் மகிழ்ந்து
நித்தமுமேகெம்பீரமாய்க் களிகூருங்கள் – ஆவி