30 சங்கீதம்
30 சங்கீதம்
குறள் – கிரகப் பிரதிஷ்டைக் கீர்த்தனமாய்த் தாவீ
துரைத்த மகிழ்ச்சியின் பாட்டு
வெண்பா
சத்துருக்கள் என்மேலே சந்தோஷ மாகிடாமல்க்
கற்தாவே என்னைநீர் காப்பாற்றி வைத்ததினால்
உம்மை உயர்த்துவேன் உம்மைநான் கூப்பிடவே
என்னைக் குணமாக்கி னீர் (1)
என்னான்மா ஆபூ சிருள்க்குழியை விட்டேறப்
பண்ணின என் ஏகோவா பண்ணியபின் என்னுடலும்
மண்ணின் குழியில் மடங்கா துயிர்காத்தீர்
உம்மை யுயர்த்துவேனே (2)
காம்போதி ஆதிதாளம்
ஏகோவாநல் விசேடத்தோர்களே அவரை
யேற்றிப்போற்றிப் பாடிடுங்களே
1 ஏகோவாவின் நல்விசேடம்
என்றென்றைக்கும் யாதுபண்ணி
மகிமையாய்க் கொண்டாடி
வாழ்த்திடுங்களே – ஏகோ
2 எகோவாவின் கோபம்ஒரு நிமிசம் அவர்
இஷ்டதயை நீண்ட வாழ்வுதான்
அகதியாய்ச் சாயுங்காலம்
அழுகைக்குரல் தங்கிநிற்கும்
ஆனந்தகெம்பீரமுண்டு
அதிகாலையில் – ஏகோ
3 பரனேநீர் உமதுதயையால் எனது
பற்வதத்தைத் தாக்கமாக்கினீர்
அருமையாய் நல்லசுகம்
அப்பொழுது கிடைத்ததினால்
அசையேனே என்றுமென்று
அகந்தையாச் சொன்னேன் – ஏகோ
4 உமதுமுகம் நீர்மறைத்தபோது நான்
உழன்றுமிகக் கலங்கிப்போனேனே
சமாதியிலிறங்கிவிழச்
சாவதாலென் ரெத்தத்தாலே
சாமியுமக் காதயமாய்ச்
சமைவதேதென்றேன் – ஏகோ
5 தறையின்தூள் உம்மைப்போற்றியே உமது
சத்தியத்தையறிய வைக்குமோ
இறைவனாம் ஏகோவாவே
என்னைக்கேட்டிங் கெனக்கிரங்கும்
எனக்கனுகூலஞ்செய்யும்
என்று கெஞ்சினேன் – ஏகோ
6 என்மகிமை யமர்ந்திராம லும்மைத் துதித்
தின்பமாகப் புகழ்ந்துகொள்ளவே
என்னரையின் ரெட்டை நீக்கி
எடுத்துத் தூரப் போட்டுவிட்டு
என்னைமனமகிழ்ச்சியாலே
இடைகட்டினீர் – ஏகோ
7 என்புலம்ப லானந்தமாய் மாற எனக்
கின்பமான மகிழ்ச்சி தந்தீரே
என்தெய்வமாம் ஏகோவாவே
என்றென்றைக்கும் உம்மைநானே
ஏற்றிப்போற்றித் தோத்ரஞ்செய்வேன்
என்றும் மகிழ்வேன் – ஏகோ