3 சங்கீதம்
3 சங்கீதம்
குறள் – தாவீ தபுசலோஞ் கற்பனைக்குத் தப்பிவிடத்
தீவிரிக்கும்போது செய்த பாட்டு
கலிப்பா
1 என்னுடைய சத்துருக்கள்
எத்தனைக்கோபெருகினர்கள்
என்னைப் பகைசெய்துகெம்பி
எழும்புமாந்தர் மிகுத்தார்கள்
2 என துதெய்வத் திடத்தெனக்கு
இரட்சிப்பேயில்லையென்று
எனதாத்மம் நிந்தைப்பட
இழி வுசொல்வோர்மிகுத்தார்கள்
3 என்னுடைய கேடயமும்
என் மகிமை மகத்துவமும்
என் தலைக்குமேன் மை தனை
யிசைப்பருவம்நீர் தாமே
4 கற்தர் நீர் உமது சுத்தக்
கன்ம லையாம்இடத் தினின்று
பத்தனெனதுவிண்ணப்பத்தை
பக்குவமாய் கேட்டீரே
5 நித்திரையாய்ப்படுத்திருந்தேன்
நித்தமுங்கண் விழித்தெழுந்தேன்
கற்தர்நீர் தாங்கியென்னைக்
காப்பாற் றி வந்தீரே
6 பதினாயிரஞ்சத் துருக்கள்
பாளயங்கள்எனை ச்சூழ்ந்தும்
அதினால்நான் மனங்கலங்கி
அஞ்சிநிற்கமாட்டேனே
7 என்னுடையகற்தாவே
இப்போதேயெழுந்தருளும்
என்தெய்வமே என்னையிப்போ
இரட்சிக்க நீர் வந்தருளும்
8 என்பகைஞர் யாவரையும்
எட்டிக்கன்னந்தனிலடித்து
துன்மனிதர் பல்லுகளைத்
தொகையாகத் தகர்த்தருளும்
9 மீண்டி ரட்சித்தாளுவது
மெய்யாகச்சுவாமிபுறம்
ஆண்டவர் தம்சனங்களுக்கு
ஆசீர்வாதம்தந்தருள்வார்.