29 சங்கீதம்
29 சங்கீதம்
காம்போதி ஆதிதாளம்
கும்பிடுங்கள் பரனைக் கும்பிடுங்கள் பெலன்
கொண்டவர்கள் புத்திரரே கும்பிடுங்கள்
1 இன்பமுள்ளஏகோவாவுக்
கெப்பெலனுஞ்சத்துவமும்
என்றுந்தக்கதென்றுசொல்லிக்கும்பிடுங்கள் – கும்பி
2 கற்தர் நாமமகிமை தன்னை
உத்தமமாய்ச்செலுத்தி நின்று
சுத்தமேன்மைச்சிறப்புடனே கும்பிடுங்கள் – கும்பி
3 பெருநீரில்க்குமுறல் செய்து
அருண்டிடச் சத்தமிடும்
பெருமகிமைத்தெய்வத்தையே கும்பிடுங்கள் – கும்பி
4 வல்லமையாச் சத்தமிட்டு
மகத்துவமாய்முழங்கும்
வல்லதொனித்தெய்வத்தையே கும்பிடுங்கள் – கும்பி
5 கேதுருக்கள் லீபனோனின்
கேதுருக்கள் பிளந்திடவே
மாதொனியைச் செய்பவரைக் கும்பிடுங்கள் – கும்பி
6 கன்றுபோல்க் கேதுருக்கள்
கணிசமாகச் சிமாளிக்க
குன்றையசைத் திடுபவரைக் கும்பிடுங்கள் – கும்பி
7 சின்னக்காண்டாச் செந்துகள்போல்ச்
சீரியோனை லீபனோனை
உன்னச்செய் தாட்டுவோரைக் கும்பிடுங்கள் – கும்பி
8 அக்கினியின் சுவாலையைப்போல்த்
திக்கெங்கும் வெட்டி நிற்கும்
உக்கிரசத்த முள்ளவரைக் கும்பிடுங்கள் – கும்பி
9 வனாந்தரத்தை காதேசு
வனாந்தரத்தை யதிரச் செய்யும்
அனந்தசத்த முள்ளவரைக் கும்பிடுங்கள் -கும்பி
10 காடலர்ந்து பெண்மான் குட்டி
போடநல்ல அற்புதஞ்செய்
நீடுசத்த முள்ளவரைக் கும்பிடுங்கள் – கும்பி
11 தெய்வத்தி னாலயத்தில்
ஒவ்வொருத்தன் தோத்திரத்தைச்
செவ்வையுடன் செலுத்துகிறான் கும்பிடுங்கள் – கும்பி
12 வெள்ளம்பெரு வெள்ளம்வர
மேன்மண்டலம் வீற்றிருந்து
நல்லமழை தருபவரைக் கும்பிடுங்கள் – கும்பி
13 என்றென்றும் ராசாவாக
இன்பமுடன் வீற்றிருந்து
கொன்றிரட்சித்தாள்பவரைக் கும்பிடுங்கள் – கும்பி
14 தமதுசபைச் சனங்களுக்கே
யாசீர்வாதஞ் சத்துவங்கள்
சமாதானந் தருபவரைக் கும்பிடுங்கள் – கும்பி