28 சங்கீதம்
28 சங்கீதம்
தாவீதின் சங்கீதம்
காம்போதி சாபுதாளம்
கன்மலைபோ லெனக்கான தெய்வமாம்
ஏகோவாவேநான்
உம்மைநோக்கி யென்மன்றாட்டைச்சொல்கிறேன்
1 நன்மைமறு மொழியில்லாமல்
நான்குழியி லிறங்கும் பேர்போல்
நாசமாகப் போய்விடாமல்
நாவடக்கிக்கொள்ளாதையும் – கன்
2 உம்முடையபரிசுத்த சன்னதிக்கெதிர்
நேராகநான்
உயர்த்தியே நான் ஏறெடுப்பேன் கைகளை
அம்மட்டில்நான் விட்டிடாமல்
ஆவிச்சத்தம் போடும்போது
என்விண்ணப்பச் சத்தம்தொனி
யாவையும் நீர் தயவாய்க்கேளும் – கன்
3 தங்கள்பிறரோடே சமாதானத்தைப்போல்ப்
பேசிக்கொண்டுஞ்
சற்பனையைத் தங்கள்நெஞ்சில் வைத்திடுஞ்
சங்கையற்ற துன்மார்க்கர்கள்
சாயுமுடி வாகஎன்னைச்
சாமியேநீ ரிழுக்காதையுஞ்
சாமியேநீ ரிழுக்காதையுஞ் – கன்
4 அவர்கள் துன் மார்க்கநடைக்காகவும்இங்
கவர்கள் நடந்த
அக்கிரம நடைக்குத் தக்கதாகவும்
அவர்கள்பதில்ப் பலனையிங்கே
யடைந்திடச் செய்யுஞ்சுவாமீ
அவர்களுக்குச் சரிக்குச் சரி
யாகிடச்செய்யுஞ் சுவாமீ – கன்
5 தெய்வமானஎகோவாவின் செயல்கள்இங்
கவரின் கரங்கள்
செய்யுஞ்செயல்தானுங் கவனிக்கார்கள்
ஜயையோ! கோ! அவர்களை
யழித்துநிற்மூலஞ்செய்வார்
அவர்களைக் குடியேற்றார்
அவர்களைக் குடியேற்றார் – கன்
6 சாமியெந்தன் மன்றாட்டோலங் கேட்டார்இங்
கவர்க்கே தோத்ரம்
சாமியெந்தன்பரிசை பெலன் தானே
சாமியையென்னிதையம் நம்பச்
சகாயம்அப்போதே பெற்றேன்
சந்தோஷிக்கும்எந்தன் நெஞ்சம்
சாமிமேலென் பாட்டையெடுப்பேன் – கன்
7 தம்முடையரட்சிப்பருள்வாரேதம்
மபிஷேகற்கு
சாமியானதெய்வம் அவர்கள்வலுவே
உம்முடையசனத்தை மீட்டு
உம்முடைய சுதந்தரத்தை
நன்மைகாணச் செய்து மேய்த்து
நாட்டிலென்று முயரச்செய்யும் – கன்