26 சங்கீதம்
26 சங்கீதம்
தாவீதின் சங்கீதம்
துசாவந்தி ஆதிதாளம்
என்னைநீர் தாமேஞாயம் விசாரியும் எந்தன்
உண்மையில் நடக்கிறேன் எகோவாவே
1 உன்னதராஞ் சுவாமியைநான்
நம்பியேயிங் கிருக்கிறேன்
உழன்றுநானே தள்ளாடுவ தொருக்காலுமில்லையே
என்னையாராய்ந்து பாருமே
என்னைச்சோதித் தறியுமே
பொன்போல் நீர் தாமே என்நெஞ்சையும்
என்னுள்ளிந்திரியத்தையும்
நன்றாகப் புடமிடும் – என்னை
2 உம்முடைய கிருபையெந்தன்
கண்முன்னுக்கிங் கிருக்குதே
உம்முடையசத்தியத்தில்உகந்துநானோநடக்கிறேன்
துன்மார்க்கர்கள் வீணருடன்
சோம்பியுட்கார்ந் திருக்கேனே
சூழ்பதி விருப்போர் தோள்சேரேன்
தின்மைமாந்தர் கூட்டந்தன்னைச்
சினந்துநானோ பகைக்கிறேன் – என்னை
3 என் கை தன்னைக் குற்றமில்லா
நன்மையில்நான் கழுவுகிறேன்
இப்படியே துதியின் சத்தம்
நட்பாய்விளங்கச் செய்கிறேன்
என்னஉம ததிசெயமும் என்வாய்விவரித் திடஉமது
எரிபீடஞ் சுற்றி வருகிறேன் நான்
இன்பமெனக் குமது வீட்டின்
நன்மகிமைக் கூடாரம் – என்னை
4 என்னுடையசீவனை இரத்தப்பிரியரோடேயும்
என்னான்மா தன்னைப் பாவ
இட்டரோடும் வாராதையும்
தின்மைசெய லவர்களுடை
தீங்காங்கையி லிருக்கிறதே
சிலுக்கான அவர்கள்வலக்கையில்
தீவினையின் பரிதானங்கள்
மேவிரெம்பிற்றே – என்னை
5 என்னுடைய உண்மையிலே
யான்நடந்து கொள்கிறேன்
என்னைநீர் மீட்டுக்கொண்டு எனக்கிரக்கஞ்செய்யுமே
என்கால் செம்மையாகிய
நன்மார்க்கத்தில் நிலைநிற்கும்
எங்கெங்குங் கூடுங் சங்கத்தில்
எகோவாவாம் உம்மைப்போற்றி
புகழ்ந்துதுதி செய்குவேன் – என்னை