25 சங்கீதம்
25 சங்கீதம்
தாவீதின் சங்கீதம்
1 வது பங்கு வச.1 – 11
பியாகடை ஆதித்தாளம்
என்எகோவா உம்மிடம்எந்தன்
இதையத்தை யுயர்த்துகிறேன் இப்போ
என்தெய்வம் உம்மைநான் நம்பினேன் எந்தன்
இதையத்தை யுயர்த்துகிறேன்
1 என்னுடைபகைவர்கள் என்மேல்க்களி கூராமல் நான்
இகழ்ச்சிக்குள் ளகப்பட இடம் பண்ணவேண்டாம்
இதையத்தை உயர்த்துகிறேன் (ஆ!) – என்
2 அகாரணத்துரோகிகள் அனைவரும் வெட்குவர்நம
தெகோவாவின் பத்தரி லொருவர்க்கும் அதில்லை
இதையத்தை உயர்த்துகிறேன் (ஆ!) – என்
3 உம்முடைவழிகளை உணர்த்துமே ஏகோவாஇப்போ
உம்முடைபாதை யுற் யறிந்திடச்செய்யும்
இதையத்தை யுயர்த்துகிறேன் (ஆ!) – என்
4 சா மிநீர்உம்முடை சத்தியந்தனிலே வழி
போம்படிஎன்னைநீர் போதிப்பித்தருளும்
இதையத்தை யுயர்த்துகிறேன் (ஆ!) – என்
5 கற்தர்நீர் என்தலை காக்கிற தெய்வமே அதினால்
நித்தமும்உம்மைத்தாவி நிற்கிறேன் பணிவாய்
இதையத்தை யுயர்த்துகிறேன் (ஆ!) – என்
6 எனக்குமதருளுடன் இரக்கமுங்கிடைக்கட்டும் அதுக
ளனாதிகாலத்தின் ஆதிதொட்டிருக்கும்
இதையத்தை யுயர்த்துகிறேன் (ஆ!) – என்
7 என்னுடைமீறுதல் இளமையின் பாவங்கள் எல்லாம்
மன்னியும் அதுகளை நினைந்திடவேண்டாம்
இதையத்தை யுயர்த்துகிறேன் (ஆ!) – என்
8 உம்முடைகிருபையின்படியேதான்என்னைநீர்இப்போ
உம்முடைதயவின் நிமித்தமாய்நினையும்
இதையத்தை யுயர்த்துகிறேன் (ஆ!) – என்
9 தேவன்தாம் நல்லவர் உத்தம ரானதால் அவரே
பாவிநல்வழியிலே நடந்திடச்செய்வார்
இதையத்தை யுயர்த்துகிறேன் (ஆ!) – என்
10 துன்பத்தின்மனுசர்க்குச் சுவாமிதம்ஞாயமும் வழியுந்
தென்படச்செய்ததில் அவர்களைத்தாங்குவார்
இதையத்தை யுயர்த்துகிறேன் (ஆ!) – என்
11 அவருடைவொப்பந்தம் சாட்சியுங் கைக்கொள்வோர்க்கிங்கே
யவர்வழியெல்லாந் தயவுண்மையாமே
இதையத்தை யுயர்த்துகிறேன் (ஆ!) – என்
12 எகோவாவேஉம்முடை நாமத்தினிமித்தியம் எனது
வெகுவாம்அக்கிரமம் மன்னியுந்தயவாய்
இதையத்தை யுயர்த்துகிறேன் (ஆ!) – என்
2 வது பங்கு வச.12 – 14
எதுகுலகாப்போதி ஆதிதாளம்
1 எகோவாவுக்குப் பயப்பட்டே
யிருக்கும் நல்லமாமனிடனார்
தகுந்தவழியையவனுக்குச்
சாமிபோதனை செய்குவார்
2 அவனுடைய ஆத்துமம்
ஆசீர்வாதத்தில்த் தங்கிடும்
அவனின்சந்ததி பூமியை
ஆண்டுகொள்ளுஞ் சொந்தமாய்
3 சாமிக்கஞ்சும் மனுசர்க்குள்ச்
சாமிரகசியமிருக்குமே
சாமியவர்களுக்கறிவிப்பார்
தமது நல்லுடம்படிக்கையை
3 வது பங்கு வச.15 – 22
வெண்பா
என்கண்கள் எப்போதும் எகோவா மேலேதான்
அன்பாக நோக்கி அமர்ந்திருக்கும் என்ன
அவரேயென் காலை வலைக்குவிலக்கி
அவரே யிரட்சிப்பாரே
ஆனந்தபயிரவி ஆதிதாளம்
என்மேலே நீர் நோக்கமாய் எனக்கிரங்கும்
என் தனிமை சிறுமைபாருமே
1 என்னிதைய வியாகுலங்கள்
எழும்பிமிகப் பெருகினது
என்னையெந்தன் இடுக்கம்நீங்கிட
அன்புடன் நீங்க லாக்கிவிட்டிடும் – என்
2 என்னுடை சிறுமையெந்தன்
துன்பங்கள்யாவும் பார்த்து
என்பாவமெல்லாம் நீக்கும்
எதிரிகள் வினையைப் பாரும்
மிகுத்தார்கள் அவர்களென்னைப்
பகைத்தார்கள் பாவப்பகையாய் – என்
3 என்னான்மா தன்னைக் காத்து
இகழ்ச்சிவந்திடாமல்ப் பார்த்து
என்னை நீர் விடுவித்தருளும்
இருக்கிறேன் உம்மை நம்பி
உத்தமமும் நல் மெய்நிதானமும்
நித்தமுமென்னைக் காக்கச்செய்யுமே – என்
4 என்சுவாமி யும்மைநோக்கிக்
கண்ணோக்கி யிருக்கிறேன் நான்
துன்பங்க ளெல்லாத்துக்குந்
தூரமா யிசரவேலை
நீங்கலாக்கிடும் நீதித்தெய்வமே
தாங்கிவிட்டிடும் சார்ந்துகாத்திடும் – என்