20 சங்கீதம்
20 சங்கீதம்
குறள் – ராகத்தலைவனுக்கு ராசனாந்தாவீது
பாகமாயொப்புவித்த பாட்டு
எதுகுலகாம்போதி ஆதிதாளம்
1 உமதுசெபம் ஏகோவா
உபத்திரவநாளிலே
தமதுதயைச் செவிதன்னைச்
சாய்த்துக்கேட்டருள் செய்யட்டும்.
2 யாக்கோபுடை தெய்வத்தின்
நாமமுமக்கென்றுமே
தாக்கமாக உயர்ந்திருக்குந்
தஞ்சமாக இருக்கட்டும்.
3 சுத்ததலம் நின்றுமக்
கொத்தாசையை யனுப்பியே
கற்தன் சீயோனின்றேயும்மை
காத்தன்பாய்க்கண் பார்க்கட்டும்
4 சாமிக்கு நீர்செய்கிற
சர்வதகனக் காணிக்கை
யாமெல்லாமிங் கதிகப்பிரிய
மாகஏற்றுக்கொள்ளட்டும்
5 உமதிதைய வாஞ்சனைக்
கொத்ததுமக்கருளியே
உமதுயோசிப்பெல்லாம் அவர்
உவந்துநிறைவேற்றட்டும்
6 எங்களுக்கு உம்முடை
இரட்சிப்புமாக் கெம்பீரம்
எங்கள்தெய்வ நாமந்தன்னில்
ஏறிக்கொடியேற்றுவோம்
7 தபமனுயாவையும்
சாமிகேட்பார் உம்முடை
அபிசேகர் தம்மையிப்போ
அவர்காப்பார் நிச்சயம்
8 அவர்வலது கைரட்சிப்
பனந்தபெலன் காட்டியே
அவரின்சுத்த வானத்திலிருந்து
அவர்செபங் கேட்டருளினார்
9 அவர்கள்தங்கள் ரதங்களும்
இவர்கள்தங்கள் குதிரையும்
அவதிநாளில் காக்குமென்று
ஆவலாக நம்பினர்
10 எங்கள்தெய்வமாகிய
எகோவாவின் நாமத்தை
எங்கள்நெஞ்சில் நாங்கள்வைத்தே
என்றும் நம்பிக்கொள்ளுவோம்
11 அவர்களோய்ந்து முறிந்தனர்
அவத்தமாகி வீழ்ந்தனர்
கவலையற்று நாங்களெழுந்து
கால்பெலத்து நிற்கிறோம்
12 ஏகோவாவே ரட்சியும்
எங்கள் ததி நாளிலே
மகிமைராச னெங்கள்ததி
மன்றாட்டுகள் கேட்கட்டும்