2 சங்கீதம்
2 சங்கீதம்
1 – வது பங்கு . வச.1-5
பந்துவராளி சாபுதாளம்
1 சாதிகள் கொந்தளித்தே – உலகச்
சனக்கூட்டம் வீணாகச் சிந்தைகொண்டு
போதகங்கொண்டு ராசர் – உலகப்
பிரபுக்களுமொன்றாய்ச் சேர்ந்துகொண்டு
2 பரனாம் எம் எகொவாவுக்கும் – அவர்
பட்டாபிசேகஞ்செய் ராசனுக்கும்
விரோதமா யாலோசனை – செய்து
வெகு நிந்தை வார்த்தைகள் பேசினர்கள்
3 அவர்களின் கயறுகளை – நமக்
கப்பால்க் கழற்றிவிட் டெறிவமென்றும்
அவர்கள் நம் கழுத்திற் கட்டும் – கட்டை
யறுத்தெறிவோ மென்றும் பேசினர்கள்
4 பரமண்டலத்தங்களிலே – வாசம்
பண்ணுபவர்பார்த்து நகைத்திடுவார்
பரியாசமாய்த்தெய்வம் அவர்கள் இங்கே
பண்ணுங்கும்மாளியைக் கேலிசெய்வார்
5 தம்முடைய கோபத்திலே – அவர்கள்
தாக்கத்தைக் கண்டித்துப் பேசிடுவார்
தம்முடைய கோபத்திலே – அவர்கள்
தத்தளித்தஞ்சிடஞ் செய்திடுவார்
2 சங்கீதம்
2 – வது பங்கு . வச.6-9
ஆனந்தபைரவி ஆதிதாளம்
கற்தர்சொன்ன தீர்ப்பைக்கேளுங்கள் உலகின்சனமே
கற்தர்சொன்ன தீர்ப்பைக்கேளுங்கள்
1 சுத்தசீயோன் மலையின் மீது
தோன் றும்பத்ர ஆசனத்தே
வைத்தெனது ராசன்மீது
வார்த்தன பிசேகமென்று – கற்தர்
2 என்னுடைய குமாரன் நீரே
இன்றைக்கும்மைச் செனிப்பித்தேன்
என்னிடம் நீர் கேட்பதையும்
ஏற்றபடி தருவனென்று – கற்தர்
3 சாதிகளைச் சுதந்தரமாய்த்
தருவேனேயானுமக்கு
மேதினியினெல்லையுமது
மேன்மைச் சொந்தமாகுமென்று – கற்தர்
4 இரும்புத்தடி கொண்டவர்கள்
இடியச்செய்துகுயவனுடை
கரகம்போலவர்களை நீர்
கடினமாகவுடைப்பீரென்று – கற்தர்
2 சங்கீதம்
3 – வது பங்கு . வச.10-12
வனஸ்பதி ஆதிதாளம்
ராசரே ஞாய நடுவரே
1 ராசர்களேயிதையுணர்ந்து
நல்லபுத் தியாய் நடங்கள் – ராச
2 பயத்துடன் பரனை உயர்த்துங்கள்
உயர்த்துங்கள் வருக்கஞ்சி
உறசாகமாய்ப் பணிந்திடுங்கள் – ராச
3 தேவனின்குமாரன் கோவமாங்
கோவங்கெம்பி உங்களையே
கொன்றிடாமல்க் கும்பிடுங்கள் – ராச
4 உங்களின் வழியில் முங்கியே
முங்கியழியாமல்ப்பாதம்
முத்தமிட்டு நின்றிடுங்கள் – ராச
5 சீக்கி ரம்குமாரன் ஆக்கிரமம்
ஆக்கிரமான கோபம்
அக்கினிபோல்ப்பற்றி விடும் – ராச
6 தவறுகள ன்றி யவரிடம்
அவரிடத்திலண்டுவோர்கள்
அனைவருமே பாக்கியவான்கள் – ராச