19 சங்கீதம்
19 சங்கீதம்
குறள் – ராகத்தலைவனுக்கு ராசனாந் தாவீது
பாகமாயொப்புவித்த பாட்டு
1 வது பங்கு. வச . 1 – 6
காபி ஆதிதாளம்
வானங்களோ தெய்வ மகிமைவிவரிக்கும் நாம்
காணும்ஆகாசமோ அவர் கரத்தின் செயல்சொல்லும்
1 ஒருபகலோ மறுபகலுக்
குரைக்கும் வார்த்தைகள் பின்னும்
ஒருஇரவோ மறுராவுக்கு
உணர்த்துமறிவை – வான
2 அதுகளுடை சத்தங்கேள்வி
யாகாப்பாசையும் பேச்சும்
அதனமாகப் பூமியிலே
அகப்படஇல்லை – வான
3 அதுகளின்நூல் பூமியெங்கும்
அதுகளின் சொற்கள் தறணி
ஒதுங்குங்கடைசி யெல்லைமட்டும்
ஒடிச்செல்லுமே – வான
4 பொழுதுக்கொரு கூடாரம்
போட்டாரதுகளில் அது
எழும்பிடுந்தன் அறையைவிடும்
இல்மணவாளன்போல் – வான
5 வீரன்போல்த்தன் வழியிலோட
வெகுவாய் மகிழ்ந்திருக்கும் அதைச்
சேருங்காந்தி யரியாதிருக்குஞ்
சிருட்டியொன்றுமில்லை – வான
6 இந்தமுனையின் வானத்திலே
யிருந்துஎழும்பியே அப்பால்
அந்தமுனையின் வானமட்டும்
அதுசுழன்றோடும் – வான
2 வது பங்கு. வச . 7 – 14
எதுகுலகாம்போதி ஆதிதாளம்
ஆண்டவர் வேதங்குறைவற்றததினால்
ஆத்துமம் உயிரடையும்.
1 ஆண்டவர் சாட்சிசத்தியமே
அதினால்ப் பேதையும்நல்ஞானி நம
தாண்டவர்கட்டளைசெம்மைநல்லிதையஆனந்த மாகிடுமே
அருளானந்தமாமே ஆண்டவர்வேதம் – ஆண்ட
2 எகோவாகற்பனை துய்யவெள்ளை
இருட்கண்தனக்கது வெளிச்சமுமாம் நம
தெகொவாவுக்கஞ்சுதல் பரிசுத்தந்தானே
என்றென்றும் அதுவேநிற்கும்
இன்பநிலையுள்ளதாமே
ஆண்டவர் வேதம் – ஆண்ட
3 எகோவாஞாயங்கள் உண்மையதாகும்
எல்லாம் அதுகள்நீதியுமாம் பின்னும்
வெகுமாம் அபரஞ்சி பொன்னிலும் அதுகள்
விரும்பிடத்தக்கதுகள்
வெகுஇனிமையுமாமே
ஆண்டவர் வேதம் – ஆண்ட
4 தேன்கூண்டொழுகல் தேனிலும் அதுகள்
திகட்டாமதுரமதாயிருக்கும்
நானுமதடியேன் தானுமதினால்
நல்லஎச்சரிப்படைவேன்
இனிமையெச்சரிப்பாமே
ஆண்டவர் வேதம் – ஆண்ட
5 அதுகளைக் கைக்கொண்டுவருவதினால்
அநேகபலனுண்டாகிறதே ஆகா !
அதுகளால்த்தன் பிழையுணர்த்தறிந்திடுவோன்
ஆர் ? இந்தப்பூமியிலே
அருள்த்தெளிவின் கண்ணாடி
ஆண்டவர் வேதம் – ஆண்ட
6 மறைவாம் பாவப் பிழைகளாலடியேன்
மடியாப்படிக்தை விலக்கிடுமே பின்னும்
அறிவின்துணிகரப் பாவமும்என்னை
ஆளாப்படி விலக்கும்
அறிவுகாட்டிய விளக்கே
ஆண்டவர் வேதம் – ஆண்ட
7 அப்பொழுதடியேனிருதயவுண்மை
யடைந்தவனாக இருப்பேனே பின்னுந்
தப்பிதம்பெரிய பாதகத்திரட்குஞ்
சாய்வின்றி நீங்கிடுவேன்
சறுவசத்தியநிலையே
ஆண்டவர் வேதம் – ஆண்ட
8 என்கல்மலையும் மீட்பருமான
எகோவாவே உமக்குமுன் உமக்கேற்க இப்போ
என்வாய்ச்சொற்களும் இருதயநினைப்பும்
இன்பமாயிருக்கட்டுமே
இன்பஇருதய நிலையே
ஆண்டவர் வேதம் – ஆண்ட