18 சங்கீதம்
18 சங்கீதம்
குறள் – ராகத்தலைவனுக்கு ஏகோவா தாசனாந்
தாவீது ஒப்புவித்த பாட்டு
விருத்தம்
எகோவாவோ தம்முடைய தாதனான
இராசனாந்தாவீதை யவனுடைய
பகைவராம் யாவர்கையுஞ் சவுலின்கையும்
பாழ்க்கடிப்புச்செய்யாமல் மீட்டநாளில்
ஏகோவாவைநோக்கியவ னிந்தப்பாட்டின்
இன்பமாஞ்சொல்லுகளை யுரைத்துப்பாடி
தகைவா கராகத்தின் தலைவனுக்குச்
சந்தோஷமாய் நடத்தக் கொடுத்திட்டானே
கெம்பீரப்பா அல்லது கும்மிப்பாட்டு
1 என்பெலனாகிய ஏகோவா ! உம்மிலே
இதையத்தால் நானன்பு கூர்ந்திடுவேன்
என்பெலனாகிய என்சுவாமி ! உம்மிலே
இதையத்தால் நானன்புகூர்ந்திடுவேன்
2 என்தெய்வம் மீட்பவர் நம்பியஎன்குன்று
என்னுடைகோட்டையென் கேடையமும்
கன்மலைரட்சிப்பின் கொம்புயர்தஞ்சமுங்
கற்தாவேயெனக்குநீர் தாமல்லவோ
3 துத்தியத்தெய்வமாஞ் சுவாமியை நோக்கி யென்
துன்பத்தில்க் கெஞ்சினேனப்போது
சத்துருகைக்குநான் நீங்கியே ரட்சிப்பைச்
சந்தோஷமாகவுங் கண்டேனே
4 மரணக்கட்டென்னைச் சுற்றியே பிடித்தது
அருட்டிற்று பேலியாள் வாய்க்கால்கள்
நரகத்தின்கட்டென்னைச் சூழ்ந்துகொண்டது
மரணத்தின் கட்டுகள்நேரிட்டதே
5 எனக்கப்போ வந்திட்ட நெருக்கத்தில்நானென
தெகொவாவைச் சாஷ்டாங்கஞ் செய்து நின்றேன்
எனதுமெய்த்தெய்வத்தை அவ்விதத் துன்பத்தில்
ஏறிட்டுநோக்கியே சத்தமிட்டேன்
6 தமதுநல்லரண் தன்னிலிருந்தெனின்
சத்தத்தைக் காதலாய்க் கேட்டாரே
தமக்குமுன்வந்தஎன் கூக்குரல் தன்னையும்
தள்ளாமல்ச் செவியிலே யேற்றாரே
7 மண்பூமியப்போது தத்தளித்ததிர்ந்தது
மலையஸ்திவாரங்கள் குலுங்கினது
என்ன! என்றால் அவர் எரிச்சலாகினார்
எழும்பிற்று புகையவர் நாசியினால்
8 எரியுமக்கினி வாயாலே யெழும்பிற்று
எரிந்தது அவருடை பெருநெருப்பு
பரமண்டலந் தாழவேஇறங்கினார்
பாதத்தின்கீழிருள் வைத்திருந்தார்
9 காற்றுத்தூதரின் செட்டைமேலேறிய
காவல்க்கேரூபின் மேல்ப்பறந்தார்
சாற்றிடும்பெரிய பயங்காரஇருளைத்
தமக்கங்கேஒழிப்பிடமாக்கிக் கொண்டார்
10 ஆகாசக்கார்மேகத் தண்ணீ ரிருட்டப்போ
அவரைச் சூழ்ந்திட்ட கூடாரம்
எகொவாசமுகத்துப் பிரகாசத்தினால்
எழும்பியேபரிந்தது மேகங்கள்தான்
11 கன்மழைநெருப்புத் தழல்களுங்கூடியே
கற்தரால்ப்பூமியில் வீழ்ந்ததல்லோ
உன்னதமானவர் சத்தத்தைக்காட்டியே
உயர்ந்தவானத்தில் முழங்கினரே
12 கன்மழைதீத்தணல் கூடவேவிழுந்தது
கற்தரோ தம்முடை அம்பனுப்பி
தின்மைசெய்பகைவர்க்குத் திகில்வரமின்னலைத்
திரளாக்கியவர்களைச் சிதறச்செய்தார்
13 உன்னதத்தெய்வத்தின் சீறலால் அவருடை
உயர்நாசித்து வாரத்துக் காற்றதினால்
தண்ணீர்ப்பள்ளங்கள் தோன்றியே பூமியின்
தாழ்வஸ்திவாரங்கள் திறவுண்டதே
14 பரமவான் உயரத்திலிருந்து கைநீட்டியே
பத்தனாம்என்னையே யவர்பிடித்து
திரள்தண்ணீர்களி லிருந்திடும் என்னையே
திடமதாகக்கை தூக்கிவிட்டார்
15 என்னிலும் பெலத்தவீண் மானிடராகிய
எனைப்பகைசெய்கிற மாந்தருக்கும்
என்வலுசத்துரு தனங்கும்நீங்கிட
என்னையென் சுவாமியே விலக்கிவிட்டார்
16 என்னுடை ஆபத்து நாளிலேயவர்கள்
எனக்கெதிர்வந்தென்னை மறித்தார்கள்
என்மேல் பிரியமே கொண்டென தேகொவா
எனக்குநல் லாதர வாயிருந்தார்
17 என்னையுமெடுத்தவர் விசாலத்தில்வைத்தனர்
என்னையேதீங்குக்கு விலகச்செய்தார்
என்னுடை நீதிக்குத் தக்கவோர் பதில்ப்பலன்
எகொவா எனக்குத் தந்தாரே
18 எனதுகைகளின் சுத்தத்துக்கெனக்கு
ஏற்றதாய்ப்பதில் சரிக்கட்டினரே
எனது சுவாமியின் வழிகளைக்கைக்கொண்டேன்
இவரை விட்டஞ்ஞாயஞ் செய்ததில்லை
19 என்முன்னே நானவர் ஞாயங்கள் யாவையும்
இசைவாய் நிறுத்திக்கொண்டேனே
என்னைவிட்டவருடை பிரமாணங்களை
இகழ்ந்து நெகிழாம லிருந்துகொண்டேன்
20 என்னுடைசுவாமியின் சமுகந்தன்னிலே
இருதய உண்மையா யிருந்துகொண்டேன்
என்னுடைய இருதயத் துற்குணச்சிந்தைக்கு
என்னைநான் விலக்கியே காத்துக்கொண்டேன்
21 எகோவாஎன்னுடை கண்கள்முன்னிருக்கும்
என்னுடைகைச்சுத்த நேர்ப்படிக்கும்
தகுந்தயென்னுடை நீதியின்படிக்கும்
சரிப்பலன் எனக்குத்தந்தாரே
22 சுணைச்சன்மார்க்கனுக் கும்மைச் சன்மார்க்கமுஞ்
சுத்தனுக்கும்மையே சுத்தமுமாய்
மனவுண்மையாகிய மனுசனுக்கும்மைநீர்
மனவுண்மை யாகவுங் காட்டிடுவீர்
23 மாறுபாடாகிய மனுசனுக்கும்மைநீர்
வகுகோணலாகவுங் காட்டிடுவீர்
வேறுபாடாய்ச் சிறுமைச் சனத்தை ரட்சித்து
மேட்டிமைக்கண்களைத் தாழ்த்திடுவீர்
24 என்னுடையவிளக்கையும் வெளிச்சமாகவே
இருக்கச்செய்பவர் நீர்தாமே
என்தெய்வமாகிய என்சுவாமி ! நீரிங்கே
என்னிருள் வெளிச்ச மாகச்செய்வீர்
25 உம்முடன்நானொரு பரிவாரச்சேனைக்குள்
உறுதியாகவே பாய்ந்திடுவேன்
வன்மையாயெனது தெய்வத்தோடொவ்வொரு
மதிலைத்தாண்டியே குதித்திடுவேன்
26 தெய்வத்தின் வழியோ உத்தமம் சுவாமியின்
திருவாக்குச் சொல்ப்புடம் வைத்தல்லோ
தெய்வந்தம்மையே நம்பியஅனைவர்க்குஞ்
சிறந்தகேடய மாயிருப்பார்
27 எகோவாவாகிய தெய்வத்தையன்னியில்
இங்கேதெய்வமு மானவர் யார் ?
சகாயக்கன்மலை யாரிங்கே நமக்கு
தயவாம் நம்தெய்வந் தம்மைவிட
28 உரமாயென்னையே இடைகட்டி என்வழி
உத்தமமாக்குவோர் எனது தெய்வம்
ஒருமான்கால்போல் என்கா லாக்கியென்
உயரத்தில்என்னையெநிறுத்துகிறார்
29 வெண்கலவில்லுமென் புயங்களாலுமே
விசைமுடுக்காகவே வளைந்துநிற்க
என்கைக ளுயித்த நாளுக்கே யேற்றிடும்
இதமாய்ப் பழகிடச்செய்திடுவார்
30 என்னையேதாங்கிடும் உமதுநல் வலதுகை
இரட்சிப்பின்கேடயம் எனக்குத்தந்தீர்
என்னைநீர் சிறுமை யாக்கிய நற்செயல்
என்னையே பெரியவ னாக்கிவிடும்
31 என்கணங்கால்களுந் தள்ளாடாதிப்படி
என்வழி யகல மாகச்செய்தீர்
என்னுடைபகைவரைத் தொடர்ந்துநான்பிடிப்பேன்
இவர்களைக்கொல்லாமல்த் திரும்புவேனோ
32 எழுந்துநின் றிடவும் அவகாசமில்லாமல்
என்னுடைகால்களின் கீழவர்கள்
விழுந்தேமடியத் தக்கதாயவர்களை
வெட்டியே படுகள மாக்கிடுவேன்
33 என்னையோ உயித்தத்துக் கென்றுநீர் பெலத்தினால்
இடைகட்டி நின்றிடச்செய்துவைத்தீர்
என்மேலேயெழும்பின மாந்தரையிப்போது
என்கீழே மடங்கிடச் செய்துவைத்தீர்
34 என்னுடைபகைஞர்மேல் எழும்பிநா னவர்களை
இருத்திச்சங்காரஞ் செய்வதுக்கு
என்பகையாளிகள் பெலத்ததாம் பிடரியை
என்னிடம் நீ ரொப்புக் கொடுத்துவிட்டீர்
35 சத்தத்தால்மிக்கவே கூப்பிட்டுமவர்களைத்
தற்காத்துவிட்டிடயாருமில்லை
கற்தரைநோக்கியே கூப்பிட்டும் அவரதைக்
கவனித்தே உத்தாரங் கொடுக்க இல்லை
36 சுருக்கா அவர்களைத் காற்றுக்கு முன்னாக
தூளாகநருக்கி யூதிடுவேன்
தெருக்களின் சேற்றைப் போலவர்களை நானிங்கே
சிதைத்தேயொழியச் செய்திடுவேன்
37 சனத்தின்சண்டைகட் கென்னை நீர் விலக்கியே
சாதிகள்மேலென்னைத் தலையாக்கி
இனத்தால்என்னையே யரியாதசனங்களும்
என்னிடஞ்சேவிக்கச் செய்துவைத்தீர்
38 என்சத்தங்கேட்டிட்ட வுடனே பதுங்குவார்
இச்சகஞ்சொல்லியே கெஞ்சிநிற்கும்
அந்நியர்தம்முனை மளுங்கித் தங்களின்
அடைப்புவிட் டஞ்சியே புறப்படுவர்
39 எனதுகன்மலை புகழ்பெற்றேயிருப்பவர்
ஏகோவாசீவனின் சுவாமியல்லோ
எனதுரட்சிப்பின் தெய்வமோ முற்பழி
எடுக்கிற செயமெனக் களிப்பவரே
40 சனங்களெனக்குக் கீழ்படச்செய்தேயென்
சத்துருசெய்கின்ற தீமைகட்கு
எனையிங்கு விலக்கியே விடுவிக்குந் தெய்வமோ
யென்றைக்கு முயர்ந்தவ ரானவரே
41 என்னையிங்கெனக்கு விரோதயாயெழும்பும்
எல்லார்மேலுமே உயரச்செய்வீர்
தின்மையுங்கொடுமையுஞ் செய்கிறமானிடற்
கென்னைநீர் செயமாகவிலகச் செய்வீர்
42 இதுகளினிமித்தமாய்ப் புறச்சாதிமாந்தர்க்கும்
எகோவாவே உம்மைநான் அறிக்கைபண்ணி
துதிசெய்தும்முடை மகிமைநாமத்தில்
தோத்திரச்சங்கீதம் பாடிடுவேன்
43 தமதுநல்நியப்பின் ராசற்கீடேற்றத்தைச்
சாமியோ றெம்பவும் பெரிதாக்கித்
தமதுநல்லபிசேகத் தாவீதும் அவன்வித்துந்
தயையென்றும் பெற்றிடச்செய்திடுவீர்