17 சங்கீதம்
17 சங்கீதம்
தாவீதின் விண்ணப்பம்
1 வது பங்கு. வச . 1 – 8
தோடி சாபுதாளம்
நீதிவிசாரனை செய்தருளும்
எனது கூக்குரல் கவனியும்
நீதிவிசாரனை செய்தருளும்
1 சூதுள்ளஉதட்டினால்த் தோன்றிடாமல்நான்
சொல்லும்விண்ணப்பந்தன்னைச்சுவாமியே நீர்கேளும் – நீதி
2 உமதுசன்னதியிலென் ஞாயம்வந்திடவும்
உமதுகண் நிதானத்தைப் பார்க்கவுங்கடவது
எனதுள்ளம் சோதனை யாகிடராவினில்
என்னைப்பிட மிட்டேயொன்றுங் கண்டீரில்லைக்குற்றமாக – நீதி
3 எனதுவாய் மீறிடாமல் உறுதியைப்பண்ணினேன்
மனுசனின்செயல்களில்உம்முடைசொற்படி
அநியாயக்காரனின் பாதையிற்போகாமல்
அடியேனைவிலக்கியேகாத்தேனென் எகோவாவே – நீதி
4 என்னுடைகாலடிகள் பிசகாமல்ப்படிக்குநீர்
என்நடையையும்முடையவழிக்குள்ளே திடப்படுத்தும்
என்னுடைதெய்வமேநான் உம்மிடங்கெஞ்சுகிறேன்
எனக்குநீர் கேள்விகொடுத் தென்செபமின்னங் கேளும் – நீதி
5 உம்முடையவலக்கரத்துக் கெதிர்ப்பவர்கள்கைக்கு உம்மை
நம்பின பேரைநீக்கி விலக்கிரட்சிப்பவரே
உம்முடைநற்செயலை அதிசயமானதாக்கும்
உமதுகண்கருப்புவிழிபோலென்னைக் காத்தருளும் – நீதி
2 வது பங்கு. வச . 9 – 15
மோகனம் சாபுதாளம்
எகோவாவேஉம்முடைய செட்டைகள்நிழலிலே
என்னைநீர் காப்பாற்றும்
1 புகைந்தென்னைப் பாழாக்கும்
பொல்லார்க்கும் எனைச்சூழும்
பகைவர்க்கும் என்பிராண
பகைஞர்க்கும் மறைவாக – எகோ
2 அவர்களோ கொழுப்புமீறி யிருப்பார்கள் வாயினால்
அகங்காரமாகப் பேசி
அவர்களோஇப்போதெங்கள் நடைகளிலெங்களை
அங்கங்கே வளைகுவார்கள்
அவர்கள் கண்ணெங்களைத்
தரையிலே விழப்பண்ண
அபேட்சையா நோக்கிக்கொண்
டிருக்கிறதிப்போதே – எகோ
3 மறைவிலேபதிவிருக்குஞ் சிங்கத்தின்குட்டி பீற
வாஞ்சிக்குஞ் சிங்கத்துக்கும்
மறைவற ஒத்திருக்கும் அவனை நீர்முந்திக்கொண்டு
மடக்கிட எழுந்தருளும்
தறணியாமுலச்சணம் ஆகாதோன் கைக்குமென்னை
சாமிநீர்உமதுவாளால்த் தப்பிடச்செய்தருளும் – எகோ
4 அவர்கள்பங்கிங்கேதான் அவர்களின்வயிறுமது
ஆஸ்தியால் நிரம்பச்செய்வீர்
அவர்களோதிருத்தியாகித் தங்களின்சிசுக்கள்மீதி
யனுபவித்திட வைப்பார்கள்
உமதுமெய்ச்சமுகம் நானோ நீதியில்த் தெரிசிப்பேன்
உமதுநற்சாயலிலெழுந்துநான் திருத்தியாவேன் – எகோ