16 சங்கீதம்
16 சங்கீதம்
தாவீதின் தங்கச் சங்கீதம்
1 வது பங்கு. வச . 1 – 4
கழிநெடில்
1 எகொவாவாம் உம்மைஇட்டமாய் நம்பும்
என்னைநீர் காத்துமீட்டருளும்
எகோவாநீர்தாமே ஆண்டவராக
எனக்கென்றுமிருப்பவராமே
செகந்தனிலுள்ள பக்தர்களிடத்தும்
தேட்டமெல்லாத்துடனடியேன்
தேடியேயிருக்கும் நல்லவரிடத்துஞ்
சேருமேயென்னுடை நன்மை
எகோவாவேஉமது இடந்தனிலதுவோ
என்றைக்குஞ் செல்லமாட்டாதே
இடுக்கங்கள்பெருகும் அந்நியதெய்வத்
திடத்துக்குத் தீவிரிப்பவர்க்கு
மிகுதியாயவர்கள் பட்சிக்கும்ரத்த
வேள்வியை யானென்றுஞ்செலுத்தேன்
விளம்பவுமாட்டேன் அவர்களின்பேரை
மேன்மையாம் என்னுடைஉதட்டால்
2 வது பங்கு. வச . 5 – 11
காமாஸ் சாபுதாளம்
என்பங்குவீதஞ் சுவாமி
என்பாத்திரப்பங்கும் அவரே
என்னுடைவீதம் அவரால்
என்றென்றுங் காக்கப்படும்
1 இன்பமாஞ்சுதந்தரம்
எனக்கிங்கே யுண்டாயிற்று
எங்கெங்கும் முக்யமான
இடத்திலென் வீதமாச்சே – என்
2 எனக்குநல்ச் சிந்தையருளும்
எகோவாவைத் துதிசெய்வேன்
அதுக்கென்னை இரவிலெனது
ஆத்துமம் ஏவிக்கொள்ளும் – என்
3 கற்தரையெப்போதும் என்
கண்முன்னே வைத்துக்கொள்வேன்
கற்தரென் வலதுபக்கங்
காண்பதா லசையமாட்டேன் – என்
4 என்னிதையம் பூரிப்பாகி
என்மகிமை களிகூரும்
என்னுடல்தானும் வசமாய்
இங்கேதான் படுத்தேயிருக்கும் – என்
5 ஆண்டவரென் ஆத்துமாவை
ஆதேசில் விடமாட்டார்
மீண்டதம் விசேடமானேன்
மேன்மையை யழியவொட்டார் – என்
6 சீவனின்வழியை யெனக்குத்
தெரிவித்தீர் அறியச்செய்தீர்
தேவனின் சமுகந்தன்னில்ச்
செழிப்புண்டு நிறைவுமுண்டு – என்
7 தேவன்வலபக்கச் சார்பில்ச்
செல்வத்தின் பாக்கியங்கள்
மேவியே என்றென்றைக்கும்
விளைந்துகொண் டமைந்தே நிற்கும் – என்