15 சங்கீதம்
15 சங்கீதம்
தாவீதின் சங்கீதம்
காம்போதி ஏகதாளம்
1 உம்முடைய கூடாரத்தில் சுவாமி
உசிதமாகத் தங்குவோன் யார்
உம்முடைய பெரும்விசேட மான
கன்மலையில் வசிப்பவன்யார் – உம்
2 உண்மையாக நடந்திடுவோன் மகா
உறுதியாக நீதிசெய்வோன்
நன்மனசாய்ச் சத்தியத்தைத் தங்கும்
நாட்டினிலே பேசிடுவோன் – உம்
3 தன்நாவினால்ப் பின்புரணி பேசான்
தனது பிறனுக் கழிம்புசெய்யான்
தன்னைச்சேர்ந்த மாந்தன்மேலே அவன்
நிந்தைப்பேச்சை யெடுக்கமாட்டான் – உம்
4 பெத்தரிக்க மானவனை அவன்
பின்கழிப்பா யெண்ணிடுவான்
கற்தருக்குப் பயந்தோர்களை அவன்
கணிசமாகக் கொண்டாடுவான் – உம்
5 தன்நஷ்டத்துக் காணையிட்டும் அதில்
தவறுதலை யனுசரிக்கான்
அநியாயத்து வட்டிக்காகப் பணத்தை
அடுத்தவற்குக் கொடுக்கமாட்டான் – உம்
6 தப்பற்றோனை நிபப்படுத்த ஒருகை
சார்ந்துலஞ்சம் வாங்கமாட்டான்
இப்படிக்கு நடந்திடுவோன் எங்கும்
என்றென்றைக்கும் அசையமாட்டான் – உம்