149 சங்கீதம்
149 சங்கீதம்
முகாரி சாபுதாளம்
புதுப்பாட்டாய் ஏகொவாவைப் பாடி
புகழ்ந்து கொண்டாடிடுங்கள்
1 துதித்துச்சன் மார்க்கரின் சபையிலே யாவருக்குத்
தோத்திரஞ் செய்திடுங்கள் தன்னைத்
தோன்றிடச் செய்திட்ட சுவாமிக்குள் இசரவேல்
சுகித்திங்கு மகிழ்ந்திடட்டும் – புது
2 தங்களினரசனுக்குள்ச் சீயோன்
சபையார்கள் களிகூரட்டும் மகா
மங்களமாயவர் நாமத்தில் கீதத்தின்
வாத்தியங் கொட்டிக்கொண்டு சுர
மண்டலத் தொனியாலும் மேளத்தினாலுமே
வாழ்த்தியே புகழ்ந்திடட்டும் – புது
3 தம்முடை சனங்களின்மேல் சுவாமி
சந்தோசங் கொள்ளுகிறார் அவர்
தம்முடைரட்சிப்பால்ச் சிங்காரஞ் செய்குவார்
தாழ்வுற்ற சிறுமையோரைச் சுத்தச்
சன்மார்க்கர் மகிமையாய்க்களிகூர்ந்துபடுக்கைமேல்
சந்தோச மாகுவார்கள் – புது
4 பரனையே புகழுந்துதி அவர்கள்
பரிசுத்த வாயில்த்தங்கும் அதுபோல்
இருபுறங் கருக்கான பட்டையம் அவர்களின்
இதக்கையே பிடித்துநிற்கும் அவர்கள்
இடுவார்கள் தெண்டனை சாதிகள் சனங்கள்மேல்
எடுப்பார்கள் பதில்ப்பழியை – புது
5 சாதிகளரசர்களை இவர்கள்
சங்கிலியாலே கட்டி அவர்கள்
தீதுமேன் மக்கட்கு விலங்கிட்டு எழுதிய
தீர்ப்பையே முடிப்பார்கள் இந்தச்
செயங்களோஏகோவாவின் சன்மார்க்கரனைவர்க்குந்
தெய்வத்தா லுண்டாகும் – புது