148 சங்கீதம்
148 சங்கீதம்
ஜிஞ்சுட்டி ஆதிதாளம்
எகொவாவைத் துதிசெய் யுங்களே அவர்
இன்பநாமந் துதிசெய் யுங்களே
1 தொகையாகப் பரமண்டலந்
தொடுத்திடும் படைப்புகளே
தூதர்சேனையாம் எல்லோரே
தூரமான உயரங்களில் -எகொ
2 சகலமான உயர்சேனைகளே சூர்ய
சந்திரனெனுங்கிரக இனங்களே
வெகுவான நட்சத்திர
வெள்ளிகளாம் வெளிச்சங்களே
மகாவானம் வானங்களே
வானத்துத் தண்ணீர்களே -எகொ
3 எகோவா கட்டளையினால் உண்டா
யிருக்கவே வரம்பெற்றீர்களே
சாகாத பிரமாணத்தைத்
தந்தென்றும் உங்களையே
சதாகாலமாக வுறுதிப்
படுத்தியே யிருத்திவைத்த -எகொ
4 பூமியிலுள்ள வஸ்துக்காள் கடலில்ப்
புரளுகிற திமிங்கலங்களே
நேமிச்சகல ஆழங்களே
நெருப்பே கல்மாரிகளே
நிலத்திலே யுரையும்பனி
நிரந்திடும் மூடுபனியே -எகொ
5 கற்தர்சொல்லின் படியே செய்கிறமகா
கடுங்காற்றே பற்வதங்களே
மெத்தவும் உயர்ந்த சகல
மேடேகனி விருட்சங்களே
விஸ்தாரமான சகல
மேன்மையின் கேதுருவே -எகொ
6 காட்டிலுள்ள சீவசெந்துக்காள் சகல
நாட்டின் மிருகசீவசெந்துக்காள்
ஆட்டியூருஞ் சீவன்களே
ஆகாயத்தில்ப் பறந்துதிரிந்
தலைகின்ற செட்டையுள்ள
அடங்கலாம் பட்சித்திரளே -எகொ
7 றாசாக்கள் பிரபுக்களே சகல
ஞாயாதி பதிகளானோரே இந்தத்
தேசத்தின் குடியெல்லோரே
சிறுவரே கிழவர்களே
பாசத்தின் வாலிபரே
பாவையராங் கன்னியர -எகொ
8 கற்தாவின் நாமம்ஒன்று தான் உயர்ந்து
கற்தாவின் மகிமை மாத்திரம் இங்கே
மெத்தவும் உயர்ந்தவானம்
மேதினியாம் பூமிக்குமே
மேலாக உயர்ந்தெழும்பி
வெளிப்பட்டே யிருப்பதினால் -எகொ
9 பரிசுத்தர்க ளெல்லாருக்குமே தம்மைப்
பற்றுஞ் சனங்க ளாகியிருக்கிற மிகு
பிரியமாம் இசரவேலின்
பிள்ளைகட்குங் கொண்டாட்டமாய்
பரனொரு கொம்புயரப்
பண்ணினார் தம்சபைக்கு -எகொ