147 சங்கீதம்
147 சங்கீதம்
உசாளி ரூபகதாளம்
1 – வது பங்கு வச.1-12
நம்முடைய ஏகொவாவைப்
பாடுவது நன்மையாமே
செம்மையின்பமாகுங் கற்தர்துதிகள்
அவரைப் பாடுங்கள்
1 நம்மெகோவா எருசலேமை
நாட்டித்துரத் துண்டிருக்குஞ்
செம்மையிஸ்ரவேல் மக்களைக் கூட்டிச்
சேர்த்துக்கொள்வார் -நம்
2 மனம்நைந்த மனிதருக்குக்
கற்தர்குணந் தந்தருளி
றெணமுள்ள அவர்கள்காயங்கட்டி
ஆறச்செய்வார் -நம்
3 நட்சத்திர லக்கங்களை
எண்ணியது ஒவ்வொன்றையும்
நிற்சயமாய்த் துலங்கும் படிபேர் பேராய்
அழைக்கிறாரே -நம்
4 நம்முடைய ஆண்டவரே
பெரியவர் மிகவும் வல்லோர்
நம்மாலவர் யோசனைகளெண்ணி
முடியாதல்லோ -நம்
5 சாந்தகுண முள்ளவர்கள்
தம்மைக்கற்தர் மிகஉயர்த்தி
தாழ்ந்துதரையோடே போகச் செய்வார்
துன்மார்க்கர் கும்பை -நம்
6 கற்தருக்குத் துதிகளுடன்
பாடிக்கொண்டு நம்முடைய
கற்தருக்குச் சுரமண்டலத்தினாலே
துதிசெய்யுங்கள் -நம்
7 ஆண்டபரன் வானத்தையே
மேகங்களினாலே மூடி
வேண்டியநல் மழையைப் பூமிமீதே
பெய்யச் செய்வார் -நம்
8 மிருகசீவன் பிழைப்பதற்கு
மலையில்ப்புல் முளைக்கச்செய்து
கரையுங்காக்கைக் குஞ்சு பிழைக்கும்படிக்கும்
இரைகொடுப்பார் -நம்
9 புருடர்தொடை குதிரைப்பெலன்
தன்னைச் சுவாமி விரும்பிடாமல்
அருண்டுதமது கிருபைநம்புஞ் சனத்தில்ப்
பிரியங்கொள்வார் -நம்
147 r’;fPjk;
சங்கராபரணம் திரிபுடைதாளம்
2 – வது பங்கு வச.13 – 20
பரனென்றும் உங்கள்கற்தர் தமக்கே நீங்கள்
பணிந்தென்றுந்தோத்ரஞ்செலுத்தி நில்லுங்கள்
1 எருசலேம் பட்டணமே
இசைந்த சீயோன் கோணம்பதியே
பரனுங்கள் வாசல்ப்பூட்டைப்
பத்திரஞ் செய்வதாலே -பரனெ
2 உங்களிலுள்ளபிள்ளைத் திரட்குக்கற்தர்
உகந்தாசீர்வாதஞ் செய்கிறாரே
உங்களெல்லை தன்னில்ச்சமாதானம் அவர்
உறுதியாய்த் தங்கச்செய்கிறாரே
உண்கவே கோதும்பையின்
தமிழ்நாட்டு விசேடம்
(உண்கவே நெல்லுப் பயிரின்)
உயர்வான புஷ்டிதன்னை
பங்கமில்லாமல்த் தந்து
பரிபூர்ணமடையச் செய்யும் -பரனெ
3 சாமியோ தமதுவார்த்தை தன்னையிந்தப்
பூமிமேலனுப்பு வாரே பார்ப்பீர்
சாமியிங்குரைக்குஞ் சொல்லோ என்றும் மகாச்
சடுதியிலோடு மதைக் காண்பீர்
சாமிவெண் பஞ்சு போலே
தருவாரே உரைந்த மழையை
பூமிமேலுரைந்த பனியைச்
சாம்பல்போல்த் தூவு வாரே -பரனெ
4 கன்மழை தன்னைத்துண்டு துண்டாய்ச் சாமி
காசினி தன்னில்விழச் செய்வார்
என்னஇவ்வுலகில் எந்தமாந்தன் அவர்
இசைக்கிற குளிரைத்தாங்கி நிற்பான்
அன்னவிதக் குளிரையிங்கே
அவர்தமது சொல்லாலுருக்கிச்
சன்னமாய்க் காற்றி னாலே
தண்ணீரா யோடச்செய்வார் -பரனெ
தமிழ்நாட்டு விசேடம்
(கற்போலே துண்டு துண்டாயிங்குஞ் சுவாமி
5 கன்மழை தரையில்விழச் செய்வார்
நிற்பானோ மலையின் குளிரைத் தாங்கி மனுஷன்
நிற்பினுஞ் சுவாமி யுதவிவேண்டும்
சற்றுவன மடர்ந்த மலைமேல்
சாரல்க்காற்று வீசஉடனே
தத்தித்தண்ணீ ராறாய்ப் பொங்கிச்
சாடீடுந்தாழந்த தரைமேல் -பரனெ
6 நிசமாகயாக்கோபுக்கே எகோவா தமது
நேசமாம் வசனந் தன்னைக்கொடுத்தார்
இசரவேல்ச் சாதியார்க்குத்தமது ஞாயப்
பிரமாண இசைவையுமே வகுத்தார்
இசைவாக எச்சாதிக்கும்
இப்படிச் செய்ததில்லை
பிசகாக் அவர்களிந்தப்
பிரமாணமும் மறந்திட்டார்கள் -பரனெ