146 சங்கீதம்
146 சங்கீதம்
சங்கராபரணம் ஏகதாளம்
ஏகோவாவையே துதிசெய்திடு
என்னுடை ஆத்துமாவே
1 ஏகோவாவைநான் துதிசெய்குவேன்
என்னுயிருள்ள மட்டுக்கும்
என்பரன்புகழ் பாடுவேனிங்கே
இருக்கும்நாள் பரியந்தமும் -ஏகொ
2 பிரபுக்கள்ரட்சிப்பற்றமானிடன்
பெலனை நம்பிடா திருங்கள்
புறப்படும்ஆவி மண்ணாவான் எண்ணம்
போய்விடும் அந்த நாளிலே -ஏகொ
3 ஆக்கமாய்வானஞ் சமுத்திரம் பூமி
அதிலனைத்து முண்டாக்கின
யாக்கோபின் தெய்வந்தன் துணையென்ன
நம்பிக்கொண்டவன் பாக்கியவான் -ஏகொ
4 எகொவாவோ குலதெய்வமே அவர்
என்றைக்கும் உண்மை காப்பவர்
பகையினாலொடுங்கும் பேர்க்குநல் ஞாயம்
பாதுகாத்தருளிச் செய்குவார் -ஏகொ
5 பசியடைந்தவர்க்கா காரமிங்கு
பத்ரமாய்க் கொடுத்தருளுவார்
வசையில்க்கட்டுண்ட மாந்தர் மீட்பையே
வாஞ்சையாய்க் காணச்செய்குவார் -ஏகொ
6 குப்புறவிழும் நரரைத்தூக்குவார்
குருடர் கண்களைத் திறப்பார்
தற்பரன் நீதிமான்கள் பேரிலே
தயைசினேகமாயிருப்பார் -ஏகொ
7 மேன்மையாய்ப் பரதேசியைக் காத்து
விதவை ஏழையைத் தாங்குவார்
ஆனாலாகாத மாந்தர் பாதையை
ஆண்டவர் கவிழ்த்துப் போடுவார் -ஏகொ
8 தலைமுறைகளாய்ச் சீயோனே உனது
சாமிராசாவாய் ஆளுவார்
பெலமா யேகொவா சதாகாலமும்
பேர்பெற ஆண்டுகொள்ளுவார் -ஏகொ