144 சங்கீதம்
144 சங்கீதம்
தாவீதின் சங்கீதம்
1 – வது பங்கு வச.1-11
வராளி ஆதிதாளம்
தோத்திரந்தகுமே ஏகொவாவுக்கே
தோத்திரந் தகுமே
1 காத்தென்கைக்கும் விரல்க்கும்போரை
கற்பிக்குமெந்தன் கனமலைதனக்குத் – தோத்
2 அவர் என் கோட்டையானார் தயவுஉயர்ந்த
அடைக்கல மாகினாரே
விவத்தினில் விடுவிப்பவர் நம்பிக்கைக்குடையவர்
மீட்கும் என்கேடையமே
அவர் என்சனத்தை எனக்குக்கீழாக
அடங்கப்பண்ணவும் வல்லவரானவர் – தோத்
3 எகோவாவே நீர்மனிதன் தன்னைநீர்பார்த்திட
எம்மாத்ரம் அவனுமிங்கே
உகந்துநீர் மனுமகனை எண்ணிட அவன் தானே
உலகத்தி லெம்மாத்திரம்
அகன்றுபோய்விடும் நிழலேயவன் நாள்
அவனோமாய்கைபோல் நீங்கிவிடுவானல்லோ – தோத்
4 எகோவாவே உம்முடைய வானங்கள் தாழ்ந்திட
இறங்கியே வந்திடும் நீர்
புகைந்திடப்பற்வதத்தைத் தீண்டயருளும்
புறப்படச் செய்யும் மின்னல்
பகைவரைக்கூட்டங் கொலைத்தே உமது
பாணத்தால் அவர்களைக் கலங்க அடித்திடும் – தோத்
5 பரத்தினிருந்துமது கரத்தை நீட்டிக்கண்
பார்த்தென்னை மீட்டருளும்
திரள்த்தண்ணீர்களுக்கும் அந்நியபுத்திரர்
சேண்கைக்குந் தப்பவையும்
திருட்டுக்கையே அவர்களின்வலதுகை
செப்பிடும்மாய்கையை அவர்களின்வாய்தான் – தோத்
6 றாசர்க்குச் செயங்கொடுக்கும் எகோவாகிய
நாதரே உம்முடைய
தாசனாந்தாவீதைப் பொல்லாக்கத்திக்குத்
தப்பிடச்செய்குவீரே
ஆசையாய்த்தம்பூரால் தசதந்திவீணையால்
ஆனந்தப்புதுப்பாட்டுமக்குப்பாடுவேன் – தோத்
7 அந்நியபுத்திரரின் கைக்கென்னைவிலக்கி
அகற்றியே தப்பப்பண்ணும்
அந்நியபுத்திரரின் கைக்கென்னைவிலக்கி
அகற்றியே தப்பப்பண்ணும்
நிண்ணயங்கெட்ட்து அவர்களின்வலதுகை
நிகழ்த்துமேமாய்கையை அவர்களின்வாய்தான் – தோத்
144 r’;fPjk;
2 – வது பங்கு வச.12-15
யமுனாகலியாணி ஆதிதாளம்
மா! பாக்யவான்கள்
வளமாயிது நடக்குமாந்தர்
1 ஆவலாமெங்க ளாண்குழந்தைகள்
அழகான இளமரம்போல்வளரட்டும்
பாவையர்களாம் பெண்குழந்தைகள்
பலத்தசித்திர அரண்போலாகட்டும் -மா! பாக்
2 எங்கள் பண்டகசாலை சகல
இன்பவஸ்துகள் நிறைந்திருக்கட்டும்
எங்களாடுகள் கிராமங்களிலே
இலக்கில் ஆயிரம்லட்சமுமாகட்டும் -மா! பாக்
3 எங்கள்மாடுகள் பெலுக்கமாகட்டும்
இடுக்கம் உள்ளுக்குள்ச் சேராதிருக்கட்டும்
பங்கவலசை போகுதலில்லாமல்
பழிப்புக்கூக்குரல் தெருவிலில்லாமல் -மா! பாக்
4 இவ்விதச் சீரைப்பெற்றிருக்குஞ் சனங்கள்
இகத்தில்ப் பாக்கியவான்கள் அதோடே
தெய்வமாய்ச் சுவாமியைக் கொண்டாடுஞ்சனங்கள்
சிறந்த பாக்கியரென்று நிற்பர்கள் -மா! பாக்