143 சங்கீதம்
143 சங்கீதம்
தாவீதின் சங்கீதம்
1 – வது பங்கு வச.1-6
தோடி ஆதிதாளம்
ஏகோவாவே எனில் வேண்டல் கேளும்
1 சேகையாயெனின் மனுவின் சொல்லுக்கு
செவிகொடுத்தும துண்மை நீதிக்கே
யொத்ததின்படி முறுமொழியெனக்
குறுதியாகவே அருளிச்செய்திடும் – ஏகோ
2 நியாயத்தீர்ப்புக்குள்ப் பிரவேசியாதிரும்
நாயனேஉம தடியேன் செத்திட
சீவனுள்ளவன் ஒருவனும் உமது
திவயசமுகத்தில் நீதிமானல்ல – ஏகோ
3 சத்துருஎன தாத்துமாவைப் பின்
பற்றிச்சீவன் தூள் தன்னில்த் தாழ்த்திப்பின்
செத்தபிராணிபோல்க் கிடத்திப்பின்னுமே
தீமையாயெனக் கிடுக்கஞ்செய்கிறான் – ஏகோ
4 எனக்குள்என்னாவி தியங்கிவாடுமே
எனக்குள்ளென்நெஞ்சு திடுக்கிட்டஞ்சிடும்
கனக்கப்பூர்வநாள் நினைக்கிறேன் உமது
கையின்செயல்களாம்யாவையுந் தியானிப்பேன் – ஏகோ
5 உமதுகைச்செயல் யாவையும் தியானிப்பேன்
எனதுகையுமக்கு நேராகவிரிக்கிறேன்
எனதுஆத்துமம் வறண்ட பூமிபோல்
உமதுமேலேதான் தாகங்கொள்ளுது – ஏகோ
143 r’;fPjk;
2 – வது பங்கு வச.7-12
எதுகுலகாம்போதி ஆதிதாளம்
சீக்கிரமாய் எனது செபங் கேளுமே
எனஆவி துவளுதே எனஆவி துவளுதே
1 சாக்குழியிலிறங்கும் பேர்க்குச்
சரியாய் நானாகிடாமல் – சீக்கி
2 உமதுமுகம் மறைத்திடாமல்
உமதுகிருபை காலையிலே
எனதுசெவி கேட்டிடச்செய்
தருளுமே சுவாமீ! – சீக்கி
3 நான்நடக்கும் வழியெனக்கு
ஞானமாகத் தெரியவையும்
நம்பினேனென் ஆத்துமாவை
உயர்த்துவேன் சுவாமீ – சீக்கி
4 என்னுடைய பகைஞருக்கு
என்னைத்தப்ப வைத்தருளும்
உம்மிடம்நான் ஒதுங்குகிறேன்
ஏகொவா சுவாமீ – சீக்கி
5 உமக்கிங்கே பிரியமான
தவச்செயல்கள் எனக்குமிகப்
படிப்பியும் நீ ரென்னுடைய
தெய்வமே சுவாமீ – சீக்கி
6 உம்முடைய நல்லஆவி
செம்மையான வழியிலென்னை
மென்மேலுமே நடத்திவரச்
செய்யுமே சுவாமீ – சீக்கி
7 உமதுதாசன் யான் அதினால்
உமதுநாம நிமித்தமென்னை
உயிரடையச் செய்து வாரும்
ஏகொவா சுவாமீ – சீக்கி
8 என்னுடைய ஆத்துமாவை
இன்னமுமே இடுக்கம்விட்டு
உம்முடைய நீதிப்படிக்கு
நீக்குமே சுவாமீ – சீக்கி
9 என்பகைஞர் என்னுயிர்க்குத்
துன்பம்செய்வோர் யாவரையும்
உம்முடைய கிருபைப்படிக்குக்
கொல்லுமே சுவாமீ – சீக்கி