142 சங்கீதம்
142 சங்கீதம்
வெண்பா
தாவீ ததுல்லா மலைக்கெபியில் வந்துதன்
சீவனைத் தப்புவிக்குந் தேட்டமாய்த் தேவனின்
ஆதரவு கேட்டுநின்ற விண்ணப்பமான
போதக சங்கீதமிதுவே
ஆனந்த பயிரவி ஆதிதாளம்
சத்தத்தால்க் கூப்பிடுகிறேன்
கற்தாவை நோக்கியென்
சத்தத்தால்க் கூப்பிடுகிறேன்
1 சத்தத்தால்க் கெஞ்சிநிற்கிறேன் அவர்க்குமுன் என்
தத்ரக்கெஞ்ச லூற்றிவிட்டேன்
நெருக்கஞ்சொன்னேன் அறிக்கையிட்டேன் -சத்த
2 என்னாவி தியங்கும்போது நீரெனக்கு
என்னவழி யென்ற்றிவீர்
கண்ணியொழித்து மண்ணில் வைத்தார்கள் -சத்த
3 என்வலது பக்கம்பாரும் ஒதுக்கில்லை
என்னையிங்கே மதிப்பவனில்லை
என்னுயிரைக் காப்பாற்ற யாருமில்லையே -சத்த
4 தேவனே நான் உம்மைநோக்கி கூப்பிட்டேன்
சீவனுள்ளோர் பூமியிலெந்தன்
அடைக்கலம் நீர் பங்குமானீர் -சத்த
5 என்னோலங் கேளுமெத்த குறுகினேன்
என்மாற்றா ரெனக்குமிஞ்சி
பெலன்கொண்டோர் என்னை விடுவியும் -சத்த
6 உமதுநாமந் துதிசெய்ய என்சீவனை
அமர்க்காவற் ககற்றிவிட்டிடும்
தயவுபண்ணிடும் நல்லோர் சூழ்ந்திட -சத்த