141 சங்கீதம்
141 சங்கீதம்
தாவீதின் சங்கீதம்
காம்போதி ஆதிதாளம்
ஏகோவா உம்மை நோக்கியே கூப்பிடுகிறேன்
என்னண்டை தீவிரியுமே
1 தகைவிலும்மைச் கெஞ்சுகையில்ச்
சாமியெனின் சத்தங்கேளும்
சாம்பிராணியென் விண்ணப்பமாம்
சாய்ந்தரப்பெலி யென்கும்பிடாம் -ஏகோ
2 என்வாயைக் காபந்துசெய்யும் மிகக்காரும்
என்னுடைய உதட்டின் வாசலை
துன்மார்க்கச் செய்கைதனக்குப் பொல்லாருடனே
கணங்கிடச்செய் யாதையும்என்னை –
அன்பாக அவர்களுடை
தீன்பண்டம் வாங்கமாட்டேன்
அக்கிரமம் மிக்கமிக்க
அவர்களிங்கே செய்வதினால் -ஏகோ
3 என்னையிங்கே தயவுடன்குட்டி நீதிமான்
என்னைமிகக் கடிந்துகொள்ளட்டும்
எண்ணையைப்போ லாகிடும்அது என்தலைக்கு
இகழாததை யென்சிரசுதான் –
இன்னமெந்தன் செபம் அவர்கள்
இக்கட்டுக்கு எதிர் நின்றாடும்
இவர்கள் நடுவர் மலைச்சார் பினி
லிருந்துருண்டு உயிர்மடிவர் -ஏகோ
4 என்கவியின் சொற்களவர்கள் இங்கேயென்றும்
இன்பமாகக் கேட்டிடச்செய்யும்
எங்களையிப் புவியிலொருவன் வெட்டிக்குத்தி
எரிகட்டை பிளக்கு மேரைபோல் –
எங்களுடை எலும்புகளோ
எரிபாதாளக் கெபியின் வாய்க்கு
எதிராகச் சிதறினதாய்
இருக்கின்றதே பெருக்கத்துடன் -ஏகோ
5 என்கண்கள் உம்மைநோக்கிடும் என்னுடைய
எசமானாம் எகோவா உம்மையே
என்னாத்மம் வெறுமையாகிட விடாதையும்
என்சுவாமி உம்மை நம்பினேன் –
கண்ணிச்சுருக்குச் சிக்குக்கென்னைக்
கடத்திவிலக்கிக் காத்துக்கொள்ளும்
துன்மார்க்கர்கள் தந்தம்வலையில்
கழலட்டும்நான் கடரட்டுமே -ஏகோ