140 சங்கீதம்
140 சங்கீதம்
குறள்-றாகத் தலைவனுக்கு றாசனாந் தாவீது
பாகமா யொப்புவித்த் பாட்டு
வராளி சாபுதாளம்
கடினப்பொல்லா மனுஷற் கென்னைநீர்
கடத்திவிட்டிடுஞ் சுவாமீ!
1 கொடுமைக்கார னென்னைக் கெடுக்காமல்
குறிப்பாய் விலக்கிக்காரும் -கடினப்
2 அவர்கள் தங்க ளிதையத்துக் குள்ளாக
அழிம்பை நினைத்திடுவர்கள்
குவிந்து தினமும் உயித்தஞ் செய்திடக்
கூட்டங் கூடுகிறார்கள் -கடினப்
3 அவர்க ளுதட்டின் கீழே விரியன்
அழிம்பு விஷங்களிருக்கும்
அவர்கள் பாம்பு போலே கூர்மை
யாக்குவார்கள் தம் நாவை -கடினப்
4 இடும்புப் பொல்லான் கைகளுக் கென்னைநீர்
இதமாய் நீக்கிடுஞ் சுவாமீ!
கொடுமைக்கார னென்னைக் கெடுக்காமல்
குறிப்பாய் விலக்கிக் காரும் -கடினப்
5 அகந்தைக்காரர் கண்ணி கயற்றை
அமைப்பர் எனக்கு மறைவாய்
உழன்றென் கால்கள் தள்ளாடச் செய்திட
உபாயம் நினைத்திட்டார்கள் -கடினப்
6 வழியோரத்திலே வலையை விரித்து
வைப்பர்கள் சுருக்கை யெனக்கு
எளியேன் எனது சுவாமியை நோக்கிநான்
எனது தெய்வம் நீ ரென்றேன் -கடினப்
7 உயித்த நாளிலென் தலையைக் காக்குமென்
உகந்த ரட்சிப்பின் பெலனே
மெய்மைச் சுவாமியம் ஏகோவா நீரெந்தன்
விண்ணப்பச் சத்தத்தைக் கேளும் -கடினப்
8 ஆகாத மாந்தன் கெம்பும் வினையும்
ஆகிய இடம்வைக்க வேண்டாம்
ஏகோவாவே அவனுடை ஆசைக்
கிடங்காணச் செய்யவும் வேண்டாம் -கடினப்
9 என்னை வளைவோர் நஞ்சா மவர்கள்
இடும்பி னுதட்டுத் தீவினை
தின்மையாக அவர்கள் மேல்த்தானே
திரும்பி மூடிட வரட்டும் -கடினப்
10 நெருப்புத் தழல்கள் அவர்கள் மேலே
நிரம்ப விழுந்திடச் செய்யும்
எழும்ப மாட்டாத குழியிலும் நெருப்பிலும்
விழட்டும் அவர்கள் தாமே -கடினப்
11 பொல்லாப்பான நாவை யுடையோன்
பூமியில் நிலைப்புக் கொள்ளான்
பொல்லாப்பவனை வேட்டையாடும்
போக்குங் கொடுமை யவனை -கடினப்
12 அலையுஞ் சிறுமையான மாந்தருக்
காகிட வேண்டிய வழக்கும்
எளியமாந்தரின் ஞாயவூடலும்
ஏகோவா தீர்ப்பரென்றறிவேன் -கடினப்
13 உமது நாமத்தை நீதிமான்கள்
உகந்து துதித்திடுவார்கள்
உமக்கு முன்பாகச் செம்மை மாந்தர்கள்
உறுதியாய் நிலைத்திடுவார்கள் -கடினப்