139 சங்கீதம்
139 சங்கீதம்
குறள்-றாகத் தலைவனுக்கு ராசனாந் தாவீது
பாகமா யொப்புவித்த் பாட்டு
1-வது பங்கு. வச.1-12
கமாசு ஆதிதாளம்
உற்றாராய்த் தறிகிறீர் கற்தாவே யென்னை
உற்றாராய்ந் தறிகிறீர்
1 உட்கார்ந்தே யிருக்குதலும்
உன்னியெழுந் திருக்குதலும்
எட்டாத உயரத் திருந்தென்
இதையத்தில்த் தோன்றும் நினைவும் -உற்றா
2 நடந்துநான் படுக்கும்போதும்
நன்றாக என்னைச் சூழ்வீர்
நடந்தஎன் வழியிலெல்லாம்
நன்றாகப் பழக்கம் வைப்பீர் -உற்றா
3 சொற்களென் நாக்கில்ப் பிறக்குந்
துரிதத்தின் முன்னேயதுகள்
முற்றிலுமே அறிந்துகொள்வீர்
முறையாயென் ஏகோவாவே -உற்றா
4 பிற்புறம் முற்புறமும்
பேணிநீ ரென்னை நெருக்கி
அற்புதக் கரத்தை யெந்தன்
அங்கத்தின் மேலே வைப்பீர் -உற்றா
5 இவ்வித அறிவோ எனக்
கெட்டாத ஆச்சரியம்
தவ்விட எட்டாவுயரத்
தாக்கமாம் என்தெய்வமே -உற்றா
6 உமதாவிக் கடியேன் மறைவாய்
ஓளித்திட எங்கேபோவேன்
உமதுநற் சமுகம் விட்டு
ஓடிநா னெங்கே மறைவேன் -உற்றா
7 பரமஸ்தல அரண்போனாலும்
பரண்நீரே அங்குமிருப்பீர்
மரணத்தின் பாதாளத்தில்
மடங்கியுமே அங்கும் நீர்தான் -உற்றா
8 விடியலின் காலவெளுப்பைப்
போலநான் விரைவாயோடி
கடல்களின் கடைசியெல்லை
கண்டும் நீ ரங்குமிருப்பீர் -உற்றா
9 உம்முடைய கையங்கென்னை
உத்தம மாக நடத்தும்
உம்முடை வலதுகையோ
உதவிசெய் தென்னைப் பிடிக்கும் -உற்றா
10 இருளென்னை மூடிக்கொண்டும்
இரவெனக் கொளிவுமாகும்
இருளெனக் கும்மை மறைத்
திடைஞ்சலுண் டாக்கிடாது -உற்றா
11 உமக்குமுன் இரவுபகல்ப்போல்
ஒருமிக்க வெளிச்சமாகும்
உமக்குமுன் வெளிச்சமிருளும்
இருக்குமே சமதையாக -உற்றா
139 r’;fPjk;
2-வது பங்கு. வச.13-18
வெண்பா
உற்பத்தி தன்னிலெந்தன் உட்கருவைக்கைக்கொண்டு
கெற்பத்தி லென்னைக் கிருபையாய்த் தற்காத்தீர்
மெத்த அதிசயமாய் உற்றுவந்தேன் ஆதலினால்
கற்தாவே நான் துதிசெய்வேன்
குறிஞ்சி சாபுதாளம்
ஆதிசயம் உம்முடை செயல்கள் அதென்
ஆத்தும மறிந்திடும் அதிகத்தில்த் தானே
1 ஒதுங்கலின் இடத்திலுண்டானேன் பூமிக்
குள்ளாகத் தாழ்வான இடத்திலுரு வெடுத்தேன்: -ஆதிசய
2 சித்திர விநோதமாய்வந்தேன் உமக்கென்
சிற்றெலும் பப்போதும் மறைந்ததேயில்லை
கற்தனே என்னுடைகருவை உமது
கண்களே யப்போது கண்டதுமுண்டே – ஆதிசய
3 இதுகளி லொன்றுமில்லாத பொழுதே
இதுகளே சமூலம் உருவாகும்போதும்
அதிபதி உம்முடை கணக்கில் அதுகள்
அணுவுமே விலகாமல்ப்பதிந்துநீர் வைத்தீர் -ஆதிசய
4 ஆகையா லென்னுடைசுவாமீ! உமக்கே
அடுத்ததாம் நினைவுக ளெத்தனையருமை
சேகையாம் அதுகளின் தொகைகள் மகா
திரட்சியாம் எத்தனை திரட்சியென் சுவாமீ -ஆதிசய
5 அதுகளை நான் எண்ணப்போனால் மகா
அதிகமாம் மணலிலு மதிகமேயாகும்
அதிகாலை வேளைநான் விழிக்கும் பொழுதும்
அடியேனிங்கும்மிடம் இன்னமுமிருப்பேன் – ஆதிசய
139 r’;fPjk;
3-வது பங்கு. வச.19-24
சங்கராபரணம் எகதாளம்
தேவனே நீர் பொல்லா மாந்தன் தன்னைக் கொன்றால்ச்
சேமமாமே மகா சேமமாமே
1 ஆவலாக ரெத்தஞ் சிந்துவோரே! நீங்கள்
அகன்றுபோங்கள் என்னை விட்டுநீங்கி -தேவ
2 உம்மைச்சொல்வர் அவர்கள் துட்டப்பேச்சாய்வீணாய்
உம்முடைய பகைஞர் உப்பினார்கள் -தேவ
3 உம்பகைவர் தம்மை உட்பகைப்பேன் உம்மைத்
தெம்பிப்போரை மிகவும் சீயென்பேன்யான் -தேவ
4 முழுப்பகையாய்ப்பகைப்பேன் இழுக்கறவே எனக்கு
பழிப்பகைஞ ரானர் பாரின்மீதும் -தேவ
5 என்னையாராய்ந் தெந்தன் இதயத்தையே உமது
உண்மையான அறிவுக் கொட்டுஞ்சுவாமீ! -தேவ
6 முந்தச்சோதித் தென்னை முக்யமாக்கி எந்தன்
சிந்தனைகளனைத்தும் திகைந்துகொள்ளும் -தேவ
7 துன்பப்பாதை எனக்குத் தூரமாக்கி நித்ய
இன்பப்பாதை என்கால் ஏகச்செய்யும் -தேவ