138 சங்கீதம்
138 சங்கீதம்
வயிரவி ஆதிதாளம்
முழுமனதாலே உம்மைத் துத்யஞ்செய்வேன் தேவர்
முன்னாக உம்மைப்புகழ்ந்து பாடிடுவேன்
1 தொழுதுதெய் வாலயத்துக் கெதிரே நின்று உமது
சுத்தமெய்க் கிருபை உண்மையினிமித்தம்
நற்றியே உமது நாமத்தைத் துதிப்பேன் -முழு
2 சகலகீர்த்தி யோசையிலுஞ் சாமிநீரே உமது
சத்தியச் சொல்லைமேன்மை யாக்கிவைத்தீர்
தகைநாளில்க் கெஞ்சும்போது மறுஉத்தாரம் எனக்கு
தந்தெனி னாவியில் நற்பெலனருளி
தந்தையா யெனக்குத் தயிரியங் கொடுத்தீர் – முழு
3 பூமியின் ராசரெல்லாம் என்கற்தாவே உமது
பொய்யாத வாக்கின் சொல்லைக் கேட்கும்போது
சாமியும்மைப் புகழ்ந்துமனிதர் பாடுவார்கள் கற்தர்
சத்தியமகிமை பெரியதானதினால்
கற்தரின் வழிகளைத் துத்தியஞ்செய்வார்கள் – முழு
4 கற்தர்தாம் உயர்ந்திருந்துந் தாழ்ந்த மாந்தன் தன்னைக்
கண்ணோக்கி யாசீர்வாதந் தந்துவாறார்
பெத்தரிக்கக் குணத்தைக்கொண்டமாந்தன் தன்னைச் சுவாமி
புறக்கணித்தகற்றியே தூரத்திலிருந்து
பறக்கடித்திடவே பர்த்தறிந்திடுவார் – முழு
5 இடுக்கத்துக் குள்ளும்எனக்கு உயிரைத்தந்துதேற்றி
என்னையிங் கெழுப்பியெந்தன் சத்துருக்கள்
துடுக்கான கோபத்துக்கு என்னைநீக்க உமது
துன்னலின்கரத்தை நீட்டியே வலது
வன்மையின்கையால் என்னைநீர் மீட்டீர் – முழு
6 எனக்காக யாவுஞ்செய்து முடிப்பீர்சுவாமீ உமது
இன்பமாங் கிருபையென்று முள்ளதாமே
சினக்கோட்டங் கொண்டேயுமது கைச்செய்கையாய் வந்த
சிற்றுரு வாமெனைக் கைநெகிழீரே
பத்தினின மேல்க்கிருபை வைத்திடுவீரே – முழு