135 சங்கீதம்
135 சங்கீதம்
1-வது பங்கு. வச.1-7
கோதாரகௌளம் ஆதிதாளம்
சுவாமிநாமம் துதி செய்திடுங்கள் – ஒரே
1 சுவாமிவீட்டில்ப் பிரகாரத்தில்
சுற்றி நின்று பணிந்துகொள்ளுஞ்
சுவாமி ஊழியக் காரர்களே
சுந்தரமாய்ப் புகழ்சொல்லி -சுவாமி
2 சுவாமிமகா நல்லவரே
சுவாமிக்குங்கள் துதிசொல்லுங்கள்
சுவாமிநாமம் கீர்த்தனத்தை
சொல்லிடுங்கள் இன்பமதே -சுவாமி
3 யாக்கோபைத் தமக்கென்றும்
இசரவேலைச் சொந்தமென்றும்
பாக்கியமாய்த் தெரிந்துகொண்ட
பரிசுத்த தெய்வமான -சுவாமி
4 ஏகோவா பெரியவரே
எமதுசுவாமி எல்லாவித
வாகன தேவருக்கும்
மகாமேல் என்றறிவேன் -சுவாமி
5 வானம்பூமி சமுத்திரங்கள்
மகா ஆழம் யாவற்றிலும்
ஞானசுவாமி தமதுசித்தம்
யாவையுமே நடத்திடுவார் -சுவாமி
6 மேகந்தன்னைப் பூமியந்தம்
விட்டெழுப்பி மழைமின்னல்
கார்கறுப்பி லுண்டுபண்ணி
காற்றுத்திரளைத் திறந்துவிடும் -சுவாமி
135 r’;fPjk;
2-வது பங்கு. வச.8-12
சுவாமி நாமம் துதி செய்திடுங்கள்
1 மாந்தர்களைத் துவக்கிமிருகம்
மட்டுக்குமே தலைச்சன்களைச்
சேர்ந்திணையா யடித்துவிட்ட
செயமுள்ள தெய்வமான -சுவாமி
2 எகிப்பத்தே உன் நடுவில்
அற்புதத்குறிப் பென்றபலத்தை
மகிபன்பார்வோ னுடைய சகல
வல்லதாசர் மேலும் விட்ட -சுவாமி
3 அநேகஞ் சாதிகளை
அதிகார ராசர்களைச்
சினமாக அடித்துக்கொல்லச்
செய்தமகா தெய்வமான -சுவாமி
4 ஏமோர்ராசன் சீகோனையும்
பாசான்ராசன் ஒகையுமே
நாமக்கானா னடங்குஞ்சகல
ராக்கியமு மழியச் செய்த -சுவாமி
5 அவர்கள் நாட்டைச் சுதந்தரமாய்
அமைத்திசராவேலரென்ற
தமதுசன மனுபவிக்குஞ்
சம்பத்தாக அருளிச்செய்த -சுவாமி
135 r’;fPjk;
3-வது பங்கு. வச.13-21
பயிரவி ஆதிதாளம்
ஏகோவா தம்மை வணங்குங்கள்
1 ஏகோவா நாமமே தலைமுறை தத்வமாய்
என்றென்றும் நிற்குமல்லோ -ஏகோ
2 ஏகோவா தம்முடை சனத்தின் ஞாயத்தை
ஏற்றபடி கேட்பதல்லால்
வாகான தம்முடைய ஊழியக்காரர்மேல்
மனசில் நல் லுருக்கங்கொள்வர் -ஏகோ
3 அக்யான மாந்தரின் விக்ரகப் பொம்மைகள்
அழிந்துபோம் மனிதர்கையின்
பொக்கானவேலையாம் பொன்வெள்ளிமுதலான
பொய்த்தேவப் பிரஸ்தாபந்தான் -ஏகோ
4 வாயினால்ப்பேசாது கண்ணினால்ப் பார்க்காது
வாயிலே சுவாசமில்லை
நேயமாய்க்காதுண்டு கேட்கவுமாட்டாது
நிற்பாக்யப் பாழ்தானே -ஏகோ
5 அதுகளைப்பண்ணுவோர் அதுகளை நம்புவோர்
அனைவர்க்குந் தீர்ந்ததென்ன
அதுகளைப்போலவே அவர்களுஞ் சவம்போல்
அவத்தமாவது தான் -ஏகோ
6 இஸ்ரவேல்வீட்டாரே ஆறோனின் வீட்டாரே
இலேவியின் வீட்டாரே
நிசமாகச்சுவாமிக்குப் பயந்திடும் வீட்டாரே
நித்தமும் தோத்ரஞ்சொல்லி -ஏகோ
7 எருசலேம் நகர்தன்னில்த் தங்கியே புகழ்பெற்று
இன்ப மாஞ் சீயோனில்
வரிசையா யென்றென்றுந் துதிபெறும் ஏகொவா
வாழ்த்துதலுக் கேற்றவரே -ஏகோ