134 சங்கீதம்
134 சங்கீதம்
அகவல்-படிகள்மே னின்று
படித்திட்ட பாட்டே
கலிப்பா
1 றாக்காலஞ் சுவாமியுடை
நல்வீட்டில் நிற்குமவர்
தாக்கான ஊழியரே
சகலபேருங் கும்பிடுங்கள்
2 கற்தருக்கே யுங்களுடை
கைகளையிங் கேறெடுத்துச்
சுத்ததலம் நோக்கியுங்கள்
தோத்திரத்தைச் செய்திடுங்கள்
3 வானம்புவி படைத்திருக்கும்
மட்டில்லா வல்லபரன்
ஞானச்சீயோன் நகரினின்று
நன்மை நமக்குத் தரக்கடவர்