133 சங்கீதம்
133 சங்கீதம்
குறள்-படிகளின் மேலே பதிவாக நின்று
படித்திட்ட தாவீதின் பாட்டு
எதுகுலகாம்போதி ஆதிதாளம்
சகோதரர்கள் ஒருமித்து
சஞ்சரிப்பதோ எத்தனை
மகாநலமும் இன்பமும்
வாய்த்த செயலா யிருக்குமே
1 ஆறோன்சிரசில் வார்த்த நல்
லபிஷேகத்தின் தயிலந்தான்
ஊறித் தாடியில் அங்கியில்
ஒழுகு மானந்தம் போலவே – சகோ
2 ஏர்மோன் மலையின் பேரிலும்
இசைந்த சீயோன் மலையிலுஞ்
சேர்மானமாய்ப் பெய்கின்ற
திவலைப் பனியைப் போலவே – சகோ
3 நேசம் மார்க்கம் இரண்டிற்கும்
சேனை யெகோவா தருகிற
ஆசீர்வாதஞ் சீவனும்
அங்கேயென்று முள்ளதே – சகோ