132 சங்கீதம்
132 சங்கீதம்
அகவல்-படிகள்மே னின்று
படித்திட்ட பாட்டே
காம்போதி சாபுதாளம்
நினையுமே எகோவா தாவீதையே
நினையுமே எகோவா அவனிக்கட்டை
நினையுமே எகோவா அதனைத்தையும்
நினையுமே எகோவா!
1 தினுசா யாக்கோபுடை தெய்வமாம் வல்லவர்க்கு
மனையாம் வீடுகட்டி வைப்பேனென்று சொன்னான் -நினை
2 தன்கண் அந்தவீட்டைச் சரியாய்க் காணுமட்டும்
தன்கூடாரந் தன்னில்த் தானுட்போகே னென்றான் -நினை
3 தன்னுடைபடுக்கைக் கட்டில்
தன்னிலே யேறேனென்றான்
தன்கண் நிமையுறக்கஞ் சாரவையேனென்றான் -நினை
4 யாக்கோபுடைய தெய்வம் யா என்ற வல்லவர்க்கு
வாக்கில் நேர்ந்தேயிந்த மட்டிலே யாணையிட்டான் -நினை
5 எப்பிராத்தாவிலும் எயார்லெளிதனிலும்
அப்பொருத்தனையின் அசைவைக்கண்டுகேட்டோம் -நினை
6 அவருடைய வாசல் அரங்கத்துக் குள்ளேவந்து
அவரின் பாதப்படியில் அன்புடன் பணிந்து கொள்வோம் -நினை
7 உமது வசஸ்தலத் துள்ளே நீரும் உமது
தகுதிப்பெட்டியுமாய்த் தானே யெழுந்தருளும் -நினை
8 உமது பூசாலிகள் உடுக்கட்டும் நல் நீதியை
உமதுவிசேடத்தோர்கள் உற்சாகப்பட்டிடட்டும் -நினை
9 உமதுதாசன் தாவீ துடைய நிமித்தமும்
தபிசேகர் நல்முகத்தை அசட்டை செய்யாதையும் -நினை
10 உன்குமாரர் நம துடம்படிக்கை சாட்சி
நன்கு கற்றே யதில் நடக்கட்டென்றார் கற்தர் -நினை
11 அவர்க ளதைப்பிடித்தால் அவர்கள்குமாரர்களும்
உவந்துன்ராசாசனத்துட்காருவார்களென்றார் -நினை
12 இதற்காய்த் தாவீதுக்கு எதார்த்த ஆணையிட்டார்
அதைவிட்டேகொவாவோ அகன்றிடார் பிசகமாட்டார் -நினை
13 சீயோனாம் நகரந்தன்னைத்தெய்வமே தெரிந்து கொண்டு
நேயவாசஸ்தல நிலையமுமாக்கினாரே -நினை
14 அதுநாம் தங்குமிடம் அங்கேநாம் வாசஞ்செய்வோம்
அதில்நாம் என்றென்றைக்கும் ஆசையை வைத்தோமென்றார் -நினை
15 அதினேழை மாந்தர்க்கப்பம் அதிகமாய்த் தந்திடுவோம்
அதிலுள்ள ஆகாரம் நாம் ஆசீர்வதிப்பமென்றீர் -நினை
16 அதிலுள்ள பூசாலிகட் கணிவமே ரட்சிப்பென்றீர்
அதில்த்தெய்வ விசெடத்தோர்கள்
அதிகமாய்ப் பூரிப்பார்கள் -நினை
17 அபிசேக தாவிதுக்கு அங்குவிளக்கேற்றிவைப்போம்
தாவீதுக்கு அங்கே கொம்பைத்
தளர்த்திடச் செய்வமென்றீர் -நினை
18 இவனுடை பகைஞருக்கு
இலட்சையை யுடுத்துவைப்போம்
இவனுடைய தலையில்க் கிரீடம்
இலங்கியே பூக்குமென்றீர் -நினை