131 சங்கீதம்
131 சங்கீதம்
குறள்-படிகளின் மேலே பதிவாக நின்று
படித்திட்ட தாவீதின் பாட்டே
நீலாம்பரி ஆதிதாளம்
1 என்னிதையம் உப்பினதாய்
இருக்கிறதே யில்லையில்லை
2 என்னைமிஞ்சுங் கருமத்திலும் நானோ
எடுப்பாகவும் நடக்க மாட்டேன்
என்னாத்மம் பொசுங்கப் பண்ணி யப்பால்
பின்னும் அதை யமரச் செய்தேன்
3 மற்ற படி எனது ஆத்மம் தனது
மாதா விடம் முலைப்பால் மறந்த
எத்தற்ற வோர் குழந்தை போலே அது
என்னிடத்தி லிருக்குமல்லோ
4 இசரவேலோ இதுநாள் முதலாக
என்றுமுள்ள காலமுமாய்
எசமான் எகோவா பெலத்தை நம்பி என்றும்
இருக்கச்செய்யும் ஏகோவாவே