130 சங்கீதம்
130 சங்கீதம்
தாழ்வினிலிருந் தும்மை நோக்கியே
Music Mp3
அகவல்-படிகள்மே னின்று
படித்திட்ட பாட்டே
சங்கராபரணம் ஏகதாளம்
தாழ்வினிலிருந் தும்மை நோக்கியே
தற்பரா! கெஞ்சி நிற்கிறேன் மகா
தயவுட னுமது செவியி லென் மனுச்
சத்தமுங் கேள்வி யாகட்டும்
1 ஆர்வந்துநிலை கொள்ளுவான் எங்கள்
அக்ரமம் நீரே நோக்கினால் எங்கள்
ஆண்டவா! உமக் கஞ்சமன்னிப்பே
அதிகம் உம்மிடத் துண்டல்லோ – தாழ்
2 சாமி உம்முடை வார்த்தைநம்பியென்
ஆத்துமங் காத்தே யிருக்குது இரவில்
தன்முறைக் கெப்போ விடியுமென் றிருக்குஞ்
சாமக்காரனைப் பார்க்கிலும்
சாமியி னிடங் கிருபையுந் திரள்
மீட்புமே கூடி யிருப்பதால் இஸ்ரவேல்ச்
சந்ததி யவரை நம்பட்டும் அதின்
தப்பித மெல்லாம் நீக்குவார் – தாழ்