13 சங்கீதம்
13 சங்கீதம்
குறள் – ராகத்தலைவனுக்கு ராசனாந் தாவீது
பாகமாயொப்புவித்த பாட்டு
நாகவராளி ஆதிதாளம்
எம்மட்டும் என்னைமறப்பீர் எகொவா
எம்மட்டும் என்னை மறப்பீர்
1 எம்மட்டும் எனைமறப்பீர்
எந்தமட்டுக்கும் உமது
இன்பமாமுகம் எனக்கு
இடுக்கங்கள்வர மறைப்பீர் – எம்
2 எம்மட்டும் எந்தன்மனசில் விசாரம்
இயோசனை தினமும் வைப்பேன்
இயோசனை தினமும் வைப்பேன்
என்னீரல்க்குலை தன்னில்
எம்மட்டும்எனது பகைஞன்
என்மேலே யுயர்ந்திடுவான் – எம்
3 என்னுடை தெய்வமான் சுவாமீ
என்னைநீர் நோக்கிப்பாரும்
என்னைநீர் நோக்கிபாரும்
என்செபங் கேட்டருளும்
என்னைநீர் நோக்கிப்பாரும்
என்செபங் கேட்டருளும் – எம்
4 நானோ அவனைமேல்க் கொண்டேன்என்று
நான் விழும்பொழுதென்னை
நான் விழும்பொழுது என்னை
நாசமாய்ப் பகைஞர்சொல்லி
நாணத்துட்படுத்திடாமல்
நன்மையாம் வெளிச்சந்தாரும் – எம்
5 நானோஉம்முடை தயவின் மேலே
நம்பிக்கையுடனிருப்பேன்
நம்பிக்கையாக உமது
ரட்சிப்பில் மனம்பூரிப்பேன்
நான்தெய்வம் நன்மை செய்த
நலத்தையே பாடிநிற்பேன் – எம்