129 சங்கீதம்
129 சங்கீதம்
அகவல்-படிகள்மே னின்று
படித்திட்ட பாட்டே
எதுகுலகாம்போதி ஏகதாளம்
இசராவே லிப்பொழுது நன்றாய்
இயம்புகிற வசனமிஃதே
1 பசலையாம் வயதுமுதல் என்னைப்
பலதரம் நெருக்கினார்கள் – இசரா
2 பசலையாம் வயதுமுதல் என்னைப்
பலதரம் நெருக்கினார்கள்
விசயமாய் அவர்க ளென்னைத் தள்ளி
மேற்கொள்ளா தகன்றிவிட்டார்கள் – இசரா
3 உழுவோர்கள் எனதுமுதுகின் மேலே
உழுதார்கள் அவர்கள் தங்கள்
கிழிவான படைச்சால்களை நீளக்
கிடங்குபோ லாக்கினார்கள் – இசரா
4 ஏகோவா நீதிபரர் அவர்
ஆகாதோர் வீசுங் கயற்றை
வாகாக அறுத்துவிட்டார் அவர்
வல்லமீட் பதினாலாச்சே – இசரா
5 சீயோனைப் பகைப்போ ரெல்லாம் பின்னே
திரும்பியோடி வெட்கிடட்டும்
ஆயுமுன் காயுங்கூரைப் புல்போல்
அவர்களிங் கழிந்திடட்டும் – இசரா
6 கதிர்கூட்டும் பேர் கை மடி அஃதால்
கனமாக நிறைந்திடாதே
அதற்கிங்கே வழி நடப்போர் தெய்வ
ஆசீர்வாதங் கூறிடார்கள் – இசரா