128 சங்கீதம்
128 சங்கீதம்
அகவல்-படிகள்மே னின்று
படித்திட்ட பாட்டே
துசாவந்தி ஆதிதாளம்
கற்தருக்குப் பயந்தேயவர்
கற்பனைச்சொல்லைக் காக்கும்
பத்தியுள்ள மாந்தனெல்லாம்
பாக்கியவாளன் நிசமே
1 உத்தம மாய்க் கைகளினால்
உழைத்துத்தின்கும் நலத்தால்
மெத்தப்பாக்கியம் நன்மையாய்ப் பூமி
மீதில்வாழ்த்து நீ செழிப்பாய் – கற்த
2 உன்னுடைய பெண்காதி உன்னுடை வீட்டருகில்
பின்னிக் கனிகொடுக்குங்கொடுமுந்திரிகைபோலும்
உன்னுடைய பிள்ளைகளோ உன்பந்தியைச் சுற்றி
ஒலிவக்கன்று போலவுமே உளுக்கார்ந்தே யிருப்பார்
உன்னதராங் கற்தருக்கு உத்தமமாய்ப் பயந்த
என்னமாந்தனும் ஆசீர்வாதத்தை
இப்படி யடைந்திருப்பான் – கற்த
3 பரன்சீயோன் நகரினின்று ஆசீர்வாத முனக்குப்
பண்பாகத் தந்தருள்வார் பாக்யவாளன் நிசமே
எருசாலேம் நன்மையை நீ இருக்குமட்டுங் காண்பாய்
இன்பமக்கள் பேரரையும் இட்டமுடன்பார்ப்பாய்
எருசலேம் பட்டணத்தில் என்றென்றைக்கும் நல்ல
இட்டமுஞ் சமாதானமும் உனக்
கிருப்பதையும் நீ பார்ப்பாய் – கற்த