127 சங்கீதம்
127 சங்கீதம்
குறள்- படிகளின் மேலே பதிவாக நின்று
படித்திட்ட சாலோமோன் பாட்டு
காம்போதி,மிஸ்ரசாதி ஏகதாளம்
1 கற்தரே வீடுகட்டா விட்டால்
கட்டுபவன் வேலை விருதா
கற்தரே நகர்காக்கா விட்டால்
காவல்க்காரன்விருதா
2 தேவனுக் குகந்தவனே அவரால்ச்
சேமத்தைப் பெறுவதினால் வேலையில்
ஆவலாய்க் காலைமுதல் உழைத்தே
அன்னத்தைப் புசிப்பதும் வீண்
3 தற்பரன் தந்தருளுஞ் சுதந்தரஞ்
சற்குணப் பிள்ளைகள் தாம் பெண்கள்
கெற்பத்தின் கனியவரால் நமக்குக்
கிடைக்கும் நற்பலனே
4 கூட்டிலே யம்புகளை நிரப்பின
கொற்றவன் கொத்தளத்தில் பயத்தின்
வாட்டமே யில்லாமல் பகைவர்க்கு
வார்த்தையைக் கொடுப்பதுபோல்
5 அம்புக்குச் சரியான வாலிப
ஆண்பிள்ளை மக்களுடன் சுகித்துத்
தெம்பாக இருப்பவனே கற்தரால்த்
தேயத்தில்ப் பாக்கியவான்