125 சங்கீதம்
125 சங்கீதம்
அகவல்-படிகள்மே னின்று
படித்திட்ட பாட்டே
எதுகுலகாம்போதி ஆதிதாளம்
பருவதம்போ லிருப்பார்கள் என்றும்
அசையாப் படிக்கே நிலைத்திடுஞ் சீயோன்
பருவதம்போ லிருப்பார்கள் மகா எகோவா
வாகிய கற்தரை நம்புகிறவர்கள் – பருவ
1 எருசலேஞ் சுற்றில் மலையிருப்பதுபோல்
எகோவா என்று மிருப்பதினால் – பருவ
2 இதுமுதல்என்றுந் தம்முடைசனத்துக்
கதுபோ லெகொவா ஆதரவே – பருவ
3 நீதியர் தங்கள் கையைஅஞ் ஞாயமாய்
நீதத் தவருக்கு நீட்டாமல் – பருவ
4 நீதிக்கே டான கொடுங்கோ லென்றும்
நீதிமான் வித்துமேல் நிலைக்காதே – பருவ
5 செம்மையாம் மனசோர் நல்லவர் தமக்கும்
நன்மைசெய் தருளும் நல்யாவே – பருவ
6 தங்களின்கோணல் வழிகட்குச் சாய்வோர்
மங்கச்செய் திடுவார் துன் மார்க்கரோடே – பருவ
7 இசரவேல் மேலே சமதானமிருக்கும்
நிசச்சமாதானம் நிலைத்திடுமே – பருவ