124 சங்கீதம்
124 சங்கீதம்
குறள்-படிகளின்மேலே பதிவாக நின்று
படித்திட்ட தாவீதின் பாட்டு
ஜிஞ்சுட்டி ஆதிதாளம்
ஏகொவா மேலே இசராவேலிப்போ
இசைக்கிற மெய்ப்புகழ் இதுவேஇதுவே ஆமாம்
1 ஏகொவா நமக்கே இடுக்கத்துக் குதவும்
இன்பமாம் அனுசாரி யானார் ஆனார் ஆமாம் – ஏகொ
2 அப்படி நமக்கே அவரிராவிட்டால்
ஆக்கிரமமாகவே வந்துவந்து மனிதர்
வெப்பமாய் நம்மை உயிருடன் எடுத்து
விழுங்கிடுவார்களே உடனேதானே ஆமாம் -ஏகொ
3 நமதாத்மத் தரண்மேல்ப் பெருவெள்ளங் கடந்தே
நமதுமேல்த் தண்ணீர்கள் புரளும்புரளும் அப்போ
நமதாத்மத் தரண்மேல் உயர்ந்த தண்ணீர்கள்
நாசமாய்க் கடந்துதோடும் அப்போதானே ஆமாம் -ஏகொ
4 அவ்வித மனிதர் பல்லுக்கே இரைவாய்
அகப்பட விட்டிடாமல்க் கடத்திவைத்து நம்மை
செவ்வையாய் மீட்ட தெய்வமாம் எகோவா
திவ்விய தோத்திரம் ஏற்கத் தக்கோர் ஆமாம் -ஏகொ
5 நமதாத்ம மிங்கோர் குருவியைப் போலே
நகர்ந்து வேடர்வைத்த வலையினின்றேஇப்போ
நமதுயிர் தப்பி விலகிடக் கண்ணி
நாசமாய்த் தெறித்தோடிப்போச்சுதல்லோ -ஏகொ
6 பரமண்டலங்கள் பூமியும் வகுத்த
பரிசுத்த ஏகோவா நாமந்தன்னில் என்றும்
வரமாய்நமக் கிங்கே வரும்நல்ல சகாயம்
வரமாக நமக்கிங்கே வரும்நல்ல சகாயம் -ஏகொ