123 சங்கீதம்
123 சங்கீதம்
அகவல்-படிகள்மே னின்று
படித்திட்ட பாட்டே
பயிரவி திரிபுடைதாளம்
பரமண்டலங்கள் மீதி லிருக்கும்
உமது இடத்தையே என்கண்
பார்வை நோக்குமே
1 இரங்கும் எங்கள் தெய்வம் உமது
இரக்கம் எங்கள்மேல் வந்து
இணங்கும் வரைக்குமே -பரம
2 வேலைக் காரர்கண் எசமான் கைகளை
நோக்கும் போலவே உம்மைப்
பார்க்க வேண்டியே -பரம
3 வேலைக் காரிகண் நாச்சியார் கைகளை
நோக்கும் போலவே உம்மைப்
பார்க்க வேண்டியே -பரம
4 எங்களுக் கிரங்கும் ஏகோ வாவே
எங்களுக் கிரங்குமே இப்போ
எங்களுக் கிரங்குமே -பரம
5 அகந்தைக் காரர் நிருவிசாரர்
பரிகாசங்களால் மனம்
முறிந்து உடைகிறோம் -பரம