122 சங்கீதம்
122 சங்கீதம்
குறள்-படிகளின் மேலே பதிவாக நின்று
படித்திட்ட தாவீதின் பாட்டு
வராளி ஏகதாளம்
சாமியின் வீட்டுக்குப் போவமென் றென்னுடன்
சாற்றுவோ ரால் மகிழ்ந்தேன்
1 சேமமான நல் எருசலேம் பட்டணச்
செல்வவாசலி லெங்கள் கால் நின்றிட -சாமி
2 எருசலேம் நல்லிணைப் பாகிய பட்டணம்
ஏற்ற கட்டிட மாகும் அதில்
இசரவேலுக்குச் சாட்சியாகவே
எகோவா கோத்திர்ங் கூடும்
பரமநாதரின் நாமத்தைத் துதிக்கப்
பரிசுத்தர் கோத்திரம் வந்து கூடிடும் -சாமி
3 அங்கேஞாய ஆசனங்களை
அமைத்து வைத்திருக்கும் அதுகள்
அரசன்தாவீது தங்கிச ஆசன
அருமைப் பேர் விளங்கும்
மங்காமலது சமாதானமாய்
வாழ்ந்து சுகிக்க வேண்டிக் கொள்ளுங்கள் -சாமி
4 உன்னதர் மந்தையாய் நின்றிடுஞ் சபையே
உன்னிலே அன்புகூர்வோர் இந்த
உலகில்ப் பரம உலகில்ச் சுகமே
உயர்த்தி யாயடைவர்
உன்னுடை அலங்கத்தில்ச் சமதானம்வர
உன்னர மனைகளில்ச் சுகமு மிருக்க -சாமி
5 என்சகோ தரருஞ் சினேகிதரு முன்னில்
இசைந்திங்கே யிருப்பதினால் உனக்
கென்றுமே சமாதானம் பெருக வென்றுநான்
இயம்பியே வாழ்த்தல்செய் தேன்
என்குல தெய்வமாம் எகோவா வீட்டுக்கென்
றின்னமும் உனக்கு நலத்தைத் தேடுவேன் -சாமி