121 சங்கீதம்
121 சங்கீதம்
அகவல்-படிகள்மே னின்று
படித்திட்ட பாட்டே
செஞ்சுட்டி ஏகதாளம்
என்னொத்தாசை மலையை நோக்கி
யேறிட்டுநான் பார்ப்பேன்
1 என்னிடம் வானம் பூமிவகுத்த
எகோவா உதவி வருமே -என்
2 உன்கால் தள்ளாட வொட்டார்
உன்காவலன் உறங்கார்
கண்ணுறங்கார் இதோ இசரவேலைக்
காப்பவர் தூங்கமாட்டார் -என்
3 எகோவா தாமே உன்னைச் சுற்றி
என்றுங் காவல் காப்பார்
எகோவா உந்தன் வலபக்கத்தில்
இருப்பார் நிழலாக -என்
4 பகலில் வெயில் இரவில் நிலவு
பலவீனஞ் செய்யாதே
எகோவாஉன்னை எந்தத் தீங்கும்
இடுக்காத கற்றிக் காப்பார் -என்
5 உன்னாத்துமங் காப்பார் பின்னும்
உன்போக்கும் உன் வரத்தும்
என்றும் இது முதலாகவே
எகோவா காத்துக் கொள்வார் -என்