120 சங்கீதம்
120 சங்கீதம்
அகவல்-படிகள்மே னின்று
படித்திட்ட பாட்டே
சௌராஷ்டகம் ஆதிதாளம்
(ஏசல்)
1 எனக்கிடுக்கம் வந்தபோது
எகோவாவை நோக்கிச் சத்த மிட்டேன் மிகு
வணக்கமாமென் சத்தத்துக்கு
மறுமொழியை யவர்கொடுத்திட்டாரே
2 ஏகோவாவே கபட்டு நாவு
இச்சகத்தி னுதடு என்ற தாலே பொல்லா
மிகையாயென் னாத்துமாவை
வேதனைசெய் யாமல்த் தப்பவையும்
3 கபட்டுநாவா லுனக்கு இங்கே
கடுந்துன்பமாய் வருவதாலென்ன சொல்லு மிகு
அபத்தமாக அது உனக்கு
அப்புரந்தான் செய்வதுவும் என்ன
4 அதுவல்லவன் கையின் கூர்மை
அம்புகள் போலிருக்கிறது மல்லாமல் பின்னும்
அதுசூரைச் செடி யெரிக்கும்
அனல்த்தழல்போ லிருக்கிறது முண்டே
5 கேதாரின் கூடாரங்கள்
கிட்டிக்குடி யிருந்ததாலெனக்கையோ நான்
பாதகரின் மெசெக்கில்க்குடி
பதிவாக இருந்ததுவும் போதும்
6 சமதானத்தைப் பகைத்து நிற்குஞ்
சண்டாள ராமவர்க ளிடத்தில்த் தங்க
அமைதியாயென் ஆத்துமமும்
அடங்கிக்குடி யிருந்ததுவும் போதும்
7 சமதானமாய்த் தங்கியே நான்
சஞ்சரித்தும் நான்பேசும் பொழுதில் அவர்கள்
அமர்க்களத்துக் காயித்தமாய்
ஆக்கிரமங் கொண்டெழும்பு வார்கள்