118 சங்கீதம்
118 சங்கீதம்
1 – வது பங்கு வச.1-14
காம்போதி ஏகதாளம்
தேவனின் கிருபை
செல்லுமே யென்றும்
ஆவலாய் அவர் நாமத்தைத் துதியுங்கள்
அவர்மகா நல்லவர்
1 தாவிஸ்ர வேல்வித்துத் தற்பரன் கிருபை
சோர்வில்லாதென்று முள்ளதேயெனச்சொல்லி
சுகித்திங்கே மகிழட்டும் -தேவ
2 ஆறோனின் வீட்டார் ஆண்டவன் கிருபை
ஏறு கடைசியின் மட்டுக்கு நிற்குமென்
றியம்பிடக் கடவர் -தேவ
3 கற்தருக்குப் பயந்த காரண வீட்டார்
நித்தியமவர் கிருபையே யுள்ளதென்
றுத்தரஞ் சொல்லட்டும் -தேவ
4 துன்பத்தி லிருந்தென் சுவாமியைக் கெஞ்சினேன்
என்னுடைபக்க மிருந்தென்னை நோக்கியே
இரட்சித்தே யருளினார் -தேவ
5 பரனெனின் பாரிசம் பயப்பட மாட்டேன்
இரந்து சாகின்ற மானிடன் எனக்கிங்கும்
என்னதான் செய்குவான் -தேவ
6 என்னன்பர் நடுவே யிருக்கிறார் சுவாமி
என்னுடை பகைஞர் அடைகிற பதிலை நான்
என் கண்ணால்ப் பார்ப்பேன் -தேவ
7 மனுசனை நம்பியே வலுப்பதைப் பார்க்கிலும்
பணிவாய்ச் சுவாமியை நம்புத லெங்கெங்கும்
பாக்கிய மாமே – தேவ
8 நாடாளும் பிரபுவை நம்பியே செயலிலும்
நாடித் தெய்வத்தை நம்பிய செயல்மகா
நன்மையா யிருக்குதே -தேவ
9 சாதிகள் யாவருந் தடுத்தென்னை வளைவர்
நீத கற்தரின் நாமத்திலவர்களை
நேரிட்டு வெட்டுவேன் -தேவ
10 பாதையி லவர்கள் பார்த்தென்னை வளைவர்
நீதகற்தரின் நாமத்திலவர்களை
நெருக்கியே வெட்டுவேன் -தேவ
11 தேனீப்போல்ச் சூழ்ந்துஞ் செடிபோல் வெந்தோய்வர்
ஞான கற்தரின் நாமத்திலவர்களை
நறுக்கியே வெட்டுவேன் -தேவ
12 தத்திநான் விழவே தள்ளினான் மனிதன்
கற்தரே எனக் கேற்றநல் லுதவியைக்
காட்டியே மீட்டனர் -தேவ
118 r’;fPjk;
2 – வது பங்கு வச.15-23
ஆனந்த பயிரவி ஏகதாளம்
எகோவா என்பெலன் கீதம்
இரட்சிப்பாகினாரே மகா எகோவா
1 மகிமை ரட்சிப்பின் கெம்பீரம்
நீதி மான்களின் கூடாரங்களில் முழங்கிக்
கொண்டு கெம்பீரம் எழும்பி நிற்குமே -எகோ
2 அவர் வலக்கையே செய்யும் பராக்கிரமம்
அவரின் வலக்கையே உயர்ந் திருக்குமே அவா
வலக்கை செய்யும் பராக்ரமச் செயலை -எகோ
3 சாவதெனக்கில்லைப் பிழைத்திருக்கிறேன்
தேவனாகிய ஏகோவாவுடை செயல்
தன்னைப் புகழ்ந்து சொல்வேன் நன்றாய் -எகோ
4 எகோவாதெண்டனை எனக்கருளியும்
மிகைச்சாவுக்கு எனைத் தாபித்து இரை
யாக ஒப்புக் கொடுக்க பாட்டாரே -எகோ
5 நீதி வாசல்கள் எனக்ருத்திறவுங்கள்
காத லாகவே அதுக்குள் புகுந்துநான் துதி
செய்வேன் எனது ஏகோவாவை -எகோ
6 அதுதான் எகோவா வாச லாகுமே
அதுக்குள்ளேதான் நீதிமான்களே புகுந்து
கொண்டு வாசஞ் செய்குவார்க்ள் -எகோ
7 பட்சமாகவே யெனைக் கேட்டீரே
ரட்சிப் பாகவே யெனக்கிருத்தீரே ஆன
படியாலும்மைப் புகழ்ந்து கொள்ளுவேன் -எகோ
8 சிற்பாசாரிகள் ஆகா தெனச்சொல்லி
அற்பமாய்த் தள்ளிப் போட்ட கல்லொன்றே மோடு
கூட்டுந்தலைக்கல் லான படிக்கே -எகோ
9 அதுவோ ஏகோவா செயலாலாயிற்று
அதுவும் நம்முடை கண்கள் முன்னேதான் மிக
அதிசெயச் செயலுமாகி யிருக்குதே -எகோ
118 r’;fPjk;
3 – வது பங்கு வச.24-29
குறிஞ்சி ஏகதாளம்
எகோவாதாந்திட்டஞ் செய்த திந்தாள் இதில்
எல்லாருங் களிகூர்ந்து மகிழ்ந்திடக் கடவோம்
1 எகோவாவே ரட்சிப்பை யருளும் எங்கள்
எகோவாவே காரியம்வாய்க்கச்செய் தருளும் -எகோ
2 எகோவாவெனும் நல்நாமந் தரித்து வரும்
மகிபற்குத் தோத்திரந் தகுந்ததே யென்றும் -எகோ
3 எகோவாவி னாலய மான சபையே
வகுக்கிறோம் உங்களுக் காசீர்வாதங்கள் -எகோ
4 எகோவாதாம் நமது மேல் வெளிச்சம் அருளும்
மகிமையின் தெய்வமா யிருக்கிறா ரல்லோ -எகோ
5 பண்டிகைப் பெலிபலிப் பீடக் கொம்பி
னண்டையிற் கொணர்ந்திடக் கட்டுங்கள் கயிற்றால் -எகோ
6 என் தெய்வம் நீர் உம்மைத் துதிப்பேன் ஆமாம்
என்தெய்வமாமும்மை யுயர்த்துவேனென்றும் -எகோ
7 எகோவாவைத் துத்தியஞ் செயுங்கள் அவர்
மிகவுமே நல்லவர் தயை நீடித்தவரே -எகோ