116 சங்கீதம்
116 சங்கீதம்
Music mp3
வெண்பா
என்சத்தம் விண்ணப்பம் ஏகோவா கேட்டதினால்
என்மனதுக் கானந்தம் ஏறிற்றே அன்பாய்த்
தமதுசெவி சாய்த்தென் சார்பாயிருந்தார்
எனதுதுதி பொல்வேன் என்றும்
சங்கராபரணம் ஆதிதாளம்
சீவனுள்ளமட்டும் எனது
தெய்வத்தைப் புகழ்வேன்
1 சாவின் கட்டு நரக இடுக்கஞ்
சஞ்சலமுந் தவிப்புந்
தாவியென்னைப் பிடித்துஞ் சுவாமி தயவாய்
சகாயம் பெற்றேன் – சீவ
2 கற்தாவேயென் ஆத்துமாவை
காத்தருளுமென்று
கற்தர் நாமம் நோக்கிக் கூப்பிட் டேன் நான்
காத்துக் கொண்டார் – சீவ
3 நமது கற்தர் மனுதி னுருக்கம்
நன்மை நீதி யுள்ளோர்
அவதி தன்னில்க் கபடற் றோரைக் காத்தே
ஆத ரிப்பார் – சீவ
4 மெலிந்துபோன உன்னைச் சுவாமி
மீட்டதாலென் மனதே
மெலிந்த உன திளைப்பாருதல்ச் சீர்க்குள்
மகிழ்ந்து திரும்பு – சீவ
5 ஆத்மங் கண்கால் மூன்றும் மரணம்
அழுகை யிடர்க்கும் நீங்க
மாற்றஞ் செய்தே உனக்கு நன்மை தந்தார்
மகிமைக் கற்தர் – சீவ
6 சீவனுள்ளோர் தேசத்திலென்
தெய்வத் தின்முன் நடப்பேன்
தேவனையே நம்பியிதை நானே
திடமாகச் சொல்வேன் – சீவ
7 றெம்ப ஒடுங்குந் துன்ப விரைவில்
நெளிந்து மாந்தன் எவனும்
வம்பன் பொய்யன் என்று சுவாமி தஞ்சம்
வந்து சேர்ந்தேன் – சீவ
8 தேவன் எனக்குச் செய்த எல்லாத்
திரளாம் நன்மைக் காக
பாவியான நானவர்க்கிங் கென்ன
பதிலீடு செய்வேன் – சீவ
9 மீட்பின் பாத்ரம் வாங்கிச்சுவாமி
மேன்மை நாமஞ் சொல்லி
ஆர்ப்பரிப்பாய் அவரின் சபைமுன் கொடுப்பேன்
நேர்த்திப் பொருளை – சீவ
10 கற்தர் விசேட மனுஷர் மரணம்
கணிசம் அவர் முன்னே
கற்தா! உம தடியாள் பிள்ளை நானும்
காலி னடுமை – சீவ
11 தேவதுத்யப் பெலியை நன்றாய்
செலுத்தி யவர் நாமம்
நாவினாலே சொல்வேன் எனது கட்டை
நாதன் அவிழ்த்தார் – சீவ
12 தேவ சபை முன் செபத்தின் வீட்டில்
செருச லேமின் நடுவில்
(திருச்சபையின் நடுவில்)
நாவினால் நான் சொன்ன நேர்த்திக் கடனை
நானே செலுத்தி – சீவ