114 சங்கீதம்
114 சங்கீதம்
வெண்பா
இசரவேல் வித்தார் எகிப்பத்தை யாக்கோவ்
வம்சத்தார்கள் அன்னியமாம்பாசை நரரை
நிசமாய்விலகவிட்டு நீங்கிவந்த நாளில்
இசைவாம் அதிசயமிதே
சங்கராபரணம் ஆதிதாளம்
இயூதாவோ தனிவிசேடச் சாதி நல்ல
இயூதாவோ தனிவிசேடச் சாதி பரனுக்கு
இயூதாவோ தனிவிசேடச் சாதி எகோவாவுக்
கிசராவே லாளுகை யானான்
ஆனான் ஆனான்
1 யோர் தான்பின் னிட்டே யோடிப்போயிற்றே
யுவர்க்கடல் விலகியே ஒடிற்று
ஒடிற்று ஒடிற்று – யூதா
2 ஆட்டுக்கிடாய்போல பற்வதங்கள் குதிக்க
ஆட்டுக்குட்டி போல் மேடுகள் துள்ளிற்று
துள்ளிற்று துள்ளிற்று – யூதா
3 கடலே நீ விலகிக் கடந்தோட உனக்குக்
காரணமாக என்ன வந்தது
வந்தது வந்தது – யூதா
4 யோர்தான் நீ திரும்பிப் போதலுக்குனக்கு
ஏதுகரமென்னதான் வந்தது
வந்தது வந்தது – யூதா
5 மந்தைக்கிடாய்போலே மலைகளே நீங்கள்
கிந்தித் துள்ள என்னஉமக்கு வந்தது
வந்தது வந்தது – யூதா
6 மேட்டிடங்காள் நீங்கள் ஆட்டுக்குட்டி போல
காட்டில்த் துள்ள என்னஉமக்கு வந்தது
வந்தது வந்தது – யூதா
7 யாக்கோபின் பரனாம் நல்லெகோவா முன்னே
தாக்கான பூமியேநீ அதிரு
அதிரு அதிரு – யூதா
8 கன்மலை நீர்த் தடாகங் கற்பாரை நீருற்
றென்னப்பட டிடஅவர் மாற்றுவார்
மாற்றுவார் மாற்றுவார் – யூதா