113 சங்கீதம்
113 சங்கீதம்
புன்னாகவராளி ஆதிதாளம்
கற்தரிடஞ்சேவிப்போர்களே இங்கே
கற்தர் நாமந் துதிசெய்யுங்கள் இதோ
1 கற்தர் நாமம் இன்றுமுதல்
காசினியி லென்றென்றைக்கும்
நித்தியமுந் துதிக்கப்படும்
நிலவரத்தை யறிந்துகொண்டு – கற்தரி
2 சூரியனிங் குதிக்குந்திசை
துடங்கியது அஸ்தமிக்குந்
தூரமட்டுங் கற்தர் நாமம்
துதிக்கப்படத் தகுந்ததாமே – கற்தரி
3 சாதிகளாம் யாவர்மேலும்
தற்பரனிங் குயர்ந்தவரே
சோதிவானத் தலங்கள் மேலுஞ்
சுயமகிமை மிஞ்சினவர் – கற்தரி
4 மகாஉயரம் வசித்திருந்தும்
வானங்களில்ப் பூமியினில்
வகையாக அமைந்திருக்கும்
வஸ்துக்களைப் பார்த்தருள்வார் – கற்தரி
5 தமதுசனத் தலைவருக்குத்
தாட்டீகர்க்கெப் பாயிருக்க
அவதியின்சிற் றெளியவனை
அழுக்குமண்ணை விட்டெடுப்பார் – கற்தரி
6 மலடியுந்தன் வீட்டினிலே
மக்களைப்பெற் றகமகிழ
நலமருளும் எங்கள் திவ்ய
நாதருக்கொப் பானவர் யார் – கற்தரி